சனி, 19 ஜூலை, 2014

ஓடிசாவில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவன் கைது !

புவனேஸ்வர்: ஒடிசாமாநில மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவனாக செயல்பட்டு வருபவர் சபயாசாசி பாண்டா (48). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தெற்கு ஒடிசாவில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது 60 கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதுவரை 25 பாதுகாப்பு படையினரையும், 34 பொதுமக்களையும் கொன்றுள்ளார். இவரை சரண் அடையும்படி மாநில அரசு பலமுறை விடுத்த கோரிக்கையை ஏற்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரை பிடிக்க துப்பு தருபவருக்கு 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பெர்ஹாம்பூரில் பதுங்கியிருந்த இவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்து கைது செய்தனர்.  அவரிடம் இருந்து துப்பாக்கி, 2 லட்சம், 500 கிராம் தங்கம், 10 செல் போன்கள், 2 சிடி மற்றும் 5 பென் டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளன. மாவோ ஒழிப்பு நடவடிக்கையில், பாண்டாவின் கைது பெரிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக