சனி, 19 ஜூலை, 2014

சரத் பவாருக்கு 89 ஏக்கர் நிலத்தை அரசு கொடுத்துள்ளது !

சரத்பவார் தலைமையில் செயல்படும் நிறுவனத்துக்கு 89 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி இருப்பதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. சிவசேனா செய்தி தொடர்பாளர் நீலம் கோரே  மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

89 ஏக்கர் நிலம் புனேயில் ‘வசந்ததா சுகர் இன்ஸ்டிடியூட்’ என்ற கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அறக்கட்டளை தலைவராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளார். மேலும் அதற்கு 11 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு 89 ஏக்கர் நிலத்தை 1 ரூபாய்க்கு 30 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் அரசு ஒதுக்கி கொடுத்து உள்ளது.  அவரது வரலாறு பூரா இதுதானே நடந்திருக்கிறது! இப்ப மட்டும் எதோ புதுசா கண்டு பிடிச்ச மாதிரில்லா சொல்றான்ய்ங்க , முன்னாடி ஜுஹு பீச்சில ஏராளமான நிலம் கொடுதாய்ங்க, போதும் போதாததுக்கு இவரு கிரிகெட் வாரிய தலையா இருந்து வாரி வாரி குவிசாய்ங்க , எந்த கட்சி வந்தாலும் இவரும் இவரின்  வாரிசுகளும்  எப்பவுமே ஜிகிர்தண்டா ஜாலிதான்
இதற்காக மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த நிலம் ஒதுக்கப்பட்டது என்பதை மாநில அரசு தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த நிறுவனம் விவசாயிகளுக்காக செய்யும் பணி என்ன? என்பதையும் விளக்க வேண்டும். கண்டனம்

அரசு நிறுவனம் என்றால், இதுபோன்ற நில ஒதுக்கீட்டை செய்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் அது அரசு நிறுவனம் அல்ல. அது ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனம். இந்த நில ஒதுக்கீட்டில் நேர்மை பின்பற்றப்படவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு நீலம் கோரே கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக