ஞாயிறு, 20 ஜூலை, 2014

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்! பெங்களூரில் பெரும் போராட்டம் !

பெங்களூரில் பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நேற்று விஸ்வரூபம் எடுத்தது. ஏராளமான பெற்றோர் வீதிகளில் திரண்டும், போலீஸ் நிலையம் முன் குவிந்தும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, போராட்டம் நடத்தியதால், பெங்களூரு நகரமே குலுங்கியது.
பெங்களூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்த, 6 வயது சிறுமி, வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்ததால், வகுப்பு ஆசிரியை, அந்த மாணவிக்கு தண்டனை வழங்கினார். வகுப்பறையை விட்டு வெளியே சென்று, உடற்பயிற்சி செய்வதற்கான கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருக்கும்படி, அந்த மாணவியிடம், ஆசிரியை கூறியுள்ளார். தனியாக அந்த அறையில் இருந்த சிறுமியை, மாணவர்களுக்கு உடற்பயிற்சி கற்று தரும் இருவர், பாலியல் பலாத்காரம் செய்தனர்.
 பாலியல் குற்றங்களுக்கு ஒரே தீர்வு..... முதல் வாரம் விசாரனை, குற்றம் நிருபிக்கபட்டால் எந்த குறுக்கீடுமில்லாமல் இரண்டாம் வாரம் தூக்கு அல்லது கண்டதும் சுட உத்தரவு. கற்பழிக்கும் காமுகர்களை ( மனித மிருகங்களை ) குற்றம் உறுதியானவுடன் தூக்கு தண்டனை நிறைவேற்றிவிட வேண்டும். . நமது இந்திய தண்டனை சட்டம் மற்றும் அரசியல் சாசனம் 60 ஆண்டு கால பழையது. அதை மாற்றி எழுதும் நேரம் வந்துவிட்டது. நான் ஒன்றும் emotional ' ஆக இதை எழுதவில்லை. மிகவும் ப்ராக்டிகல் ஆக யோசித்துதான் சொல்கிறேன். இது போன்ற கடுமையான தண்டனையால் தான் இது போன்ற சமூக சீர்கேடுகளை அவலங்களை தடுக்கமுடியும். பயமில்லாத சமுதாயம் மிகவும் அபாயகரமான மற்றும் பலகீனமான சமுதாயம். இப்பொழுது உள்ள நிலையை பார்த்தால் மனிதர்கள் மிருகங்களாக மாறிகொண்டிருக்கின்றார்களோ என்ற அச்சம் எழுகின்றது. தப்பு செய்பவருக்கு கடும் தண்டனை ஒன்றே தீர்வாகும்
இம்மாதம், 2ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் குறித்து, கடந்த, 15ம் தேதி, அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடன், போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் பெற்றோர், போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று, போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி முன், நேற்று குவிந்த ஏராளமான பெற்றோர், அருகேயுள்ள போலீஸ் நிலையத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர்.

அப்போது, 'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும்; குற்றவாளிகளை கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்' என, கோஷம் எழுப்பினர். 'பள்ளிக்கு செல்லும் சிறுமியரை, பொம்மையைப் போல் பயன்படுத்துகின்றனர்' என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்டர்களை, பல பெற்றோர் ஏந்திச் சென்றனர். போலீஸ் நிலையம் முன் குவிந்த அவர்கள், சம்பவம் நிகழ்ந்த பள்ளி மீதும், குற்றம் புரிந்தவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷமிட்டனர். போலீஸ் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை.

உடனடியாக, அங்கு விரைந்து வந்த, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவ்ராத்கர் கூறியதாவது:சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தால், நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். போலீஸ் மீது நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் குற்றவாளிகளை பிடிப்போம்.சம்பவம் நடந்தது, 2ம் தேதி. ஆனால், போலீசில், 15ம் தேதி தான் புகார் செய்யப்பட்டுள்ளது. இதில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், குற்றம் புரிந்தவர்களை நாங்கள் விரைவில் பிடித்து விடுவோம். நிச்சயம் ஓரிரு நாட்களில், குற்றவாளிகள் சிக்குவர். குற்றம் புரிந்தவர்கள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. வழக்கில் தொடர்புடையது சிறுமி என்பதால், எச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறோம். குற்றவாளிகளை பிடிக்க, போலீசார், 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு, அவ்ராத்கர் கூறி னார்.
கூடுதல் போலீஸ் கமிஷனர் கமல் பாந்த் கூறுகையில், ''விசாரணை நடந்து வருகிறது. இதுவரை, ஒன்பது பேரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். இதுதவிர, வேறு, 90 பேரிடமும் விசாரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையில், எங்களுக்கு கிடைத்த தகவல் உறுதியானதாக இல்லை. அதனால், பள்ளியில் பணியாற்றும் அனைவரிடமும் விசாரித்த பின், குற்றவாளிகளை பிடிப்போம்,'' என்றார்.

இந்தப் பேரணி மற்றும் ஊர்வலத்தால், பெங்களூரு நகரில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாட்சியங்களை அழிக்க முயற்சி?ஹெண்ணூர், ஹோலிநேட்டிவிட்டி கன்னியர் மடத்தில், சம்பவம் நடந்த அறைக்குள் சாட்சியங்களை சேகரிக்க சென்ற போலீசார், அந்த அறை சுவற்றில், 'நாங்கள் உன்னை என்ன செய்தோமோ அதை படமாக்கியுள்ளோம். இதற்காக, நீ பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், இந்த காட்சிகளை, 'டிவி' சேனல்களில் ஒளிபரப்புவோம்' என்று, சிவப்பு மையால் எழுதியிருப்பதை பார்வையிட்டனர்.அதன் பின், போலீசார், வேறு அறையில் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் இருவர், சம்பவம் நடந்த அறைக்குள் நுழைந்து, சுவற்றில் எழுதியிருந்த வாசகத்தை அழிக்க, 'ஸ்ப்ரே' செய்துள்ளனர். அந்த நேரத்தில், அவர்களை யாரோ கவனிப்பதை உணர்ந்து, வேகமாக வெளியேறி விட்டனர்.

ஹெண்ணூர் போலீசார் கூறியதாவது:கன்னியர் மடத்தை அடுத்து, புது கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு, 200 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். அவர்கள் அப்பகுதியில், பயிற்சி கன்னியாஸ்திரிகளை கிண்டல் செய்வதாக, புகார்கள் வந்துள்ளது. அவர்கள் குறித்தும், அப்பகுதியில் உள்ள குற்றவாளிகள் குறித்தும் விசாரித்து வருகிறோம்.சம்பவம், எப்போது நடந்தது என்பது இன்னமும் தெளிவாகவில்லை. கன்னியா dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக