ஞாயிறு, 20 ஜூலை, 2014

திமுகவிலிருந்து முல்லைவேந்தன் நீக்கம்; பழநிமாணிக்கத்தின் கட்சிப் பதவி பறிப்பு

தருமபுரி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான முல்லைவேந்தன் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், தருமபுரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பெ. இன்பசேகரன் ஆகியோர் அந்தப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு, உறுப்பினராக நீடிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த மக்களவைத் தேர்தலில் தலைமையின் வேண்டுகோளை ஏற்காமல், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டதாகப் பலர் மீது புகார் எழுந்தது. தவறுக்கும் மேலாக தவறை புரிந்து கொண்டே தானிபட்டு போரானடி ஞானப் பெண்ணே?

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை எனவும், உள்ளூர் கோபதாபங்களால் கொடுக்கப்பட்டவை என்றும், அதையும் மீறி யாராவது குற்றம் சுமத்தியிருந்தால் தங்களை மன்னித்து தொடர்ந்து கட்சிப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் நேரிலும், கடிதம் மூலமாகவும் விளக்கம் அளித்தனர்.
அந்த விளக்கத்தை ஏற்று, கட்சித் தலைமையை எதிர்த்து குற்றம்சாட்டியவர்கள் தவிர, மற்றவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்படுகிறது. இவர்கள் மீண்டும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகமால் கட்சிப் பணியாற்ற வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் பழநிமாணிக்கம், தருமபுரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் இன்பசேகரன் ஆகியோர் கட்சி நிர்வாகப் பொறுப்பில் இல்லாமல், உறுப்பினராக நீடிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
விளக்கம் கோரியபோது தலைமைக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தருமபுரி தெற்கு மாவட்ட அமைப்பாளர் முல்லைவேந்தன் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்றார் அன்பழகன்.
33 பேர் மீது நடவடிக்கை: மக்களவைத் தேர்தலில் 35 தொகுதிகளில் போட்டியிட்ட திமுகவுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
உள்கட்சிப் பூசலால் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றவில்லை என தோல்வி அடைந்த வேட்பாளர்கள் புகார் தெரிவித்தனர்.
எனவே, தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற திமுக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் தோல்வி குறித்து ஆராய தனிக்குழு அமைக்கப்பட்டது.
தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு வேட்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து கட்சித் தலைமைக்கு பரிந்துரை செய்ய கலசப்பாக்கம் திருவேங்கடம், தங்கம் தென்னரசு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் பரிந்துரைப்படி, தஞ்சாவூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம், விவசாய அணிச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. ராமலிங்கம், தருமபுரி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வ.முல்லைவேந்தன், தருமபுரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பெ. இன்பசேகரன் உள்ளிட்ட 33 பேர் கட்சிப் பொறுப்புகளிலிருந்து கடந்த ஜூன் 21-ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அழகிரியுடன் சமாதானம்

இடைநீக்கம் செய்யப்பட்ட 33 பேரில் பெரும்பாலானவர்கள் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள். இந்த 33 பேரில் முல்லைவேந்தன் மட்டுமே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பழநிமாணிக்கம், இன்பசேகரின் ஆகியோரிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அழகிரி ஆதரவாளரான கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதன்மூலம் அழகிரியிடம் திமுக சமாதானம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக