புதன், 16 ஜூலை, 2014

தமிழ் பொண்ணு ! சுருதி ஹாசன் சிம்புதேவன் விஜய் கூட்டணியில் !

கத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிந்துவிடும் நிலையில் இருக்க, விஜய்யின் அடுத்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடக்க ஆரம்பித்துவிட்டன. ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படத்தை அடுத்து விஜய் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது முன்பே முடிவுசெய்யப்பட்டது தான். ஆனாலும் படப்பிடிப்பிற்கான வேலைகளை விட, திரைக்கதையை சீரமைக்கும் பணியிலேயே ஈடுபட்டு வந்த சிம்புதேவன் தற்போது தான் படவேலைகளை துவங்கியிருக்கிறார்.
முதல்கட்டமாக படத்தின் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு ஸ்ருதிஹாசனை தேர்ந்தெடுத்திருக்கிறார். விஜய்யுடன் நடிக்க கமிட் ஆகியிருக்கும் மகிழ்ச்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் “சிம்புதேவனின் அடுத்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு திரைக்காவியத்தை படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று அறிவித்திருக்கிறார்.ஸ்ருதிஹாசனின் டுவிட்டிலிருந்து சிம்புதேவனின் 23-ம் புலிகேசி மாதிரியான சரித்திர காலத்து கதைக்களைத்தை இந்த படம் சார்ந்ததாக இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் தனது டுவிட்டில் சம்மந்தம் இல்லாமல் ‘தமிழ்ப்பொண்ணு’ என்ற வார்த்தையை ஸ்ருதி சேர்த்திருப்பதால் அதுவே இந்த படத்தின் டைட்டிலாகவும் இருக்கலாம். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக