வெள்ளி, 4 ஜூலை, 2014

கோவா BJP MLA: மதுபானம் இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம் !

பனாஜி: கோவாவில், பெண்கள் மதுபானக் கூடத்திற்கு செல்லும் கலாசாரம் குறித்து, மாநில அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், 'மதுபானக் கூடமும், மதுவும், இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர் தெரிவித்துள்ளார்.கோவா சட்டசபை எம்.எல்.ஏ.,வான விஷ்ணு வாகா, இது தொடர்பாக கூறியதாவது: கோவா சட்டசபை கூட்டத் தொடர், வரும், 22ம் தேதி துவங்குகிறது. அப்போது, சட்ட சபைக்கு வேட்டி அணிந்து செல்வேன். 'கோவா கடற்கரைக்கு, பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து செல்வதும், மதுபானக் கூடங்களுக்கு செல்வதும், இந்திய கலாசாரத்திற்கு எதிரானது' என, தெரிவித்த, அமைச்சர் சுதின் தவாலிகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இவ்வாறு செய்வேன். 'குட்டையான உடைகள் அணிந்து, மதுபானக் கூடங்களுக்கு பெண் செல்வதை தடை செய்ய வேண்டும்' என, அமைச்சர் தவாலிகர் தெரிவித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது.  தே மு தி க வோட பா ஜ க கூட்டணி வைக்கும்போதே நினைச்சேன் இப்படி ஆகும்ன்னு
தவாலிகரின் மூதாதையர்கள் எல்லாம், வேட்டி தான் அணிந்தனர். அதனால், அவரும் வேட்டி அணிந்து சட்டசபைக்கு வர வேண்டும். இந்திய கலாசாரத்தின் மீது, அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், இதைச் செய்ய வேண்டும். தேவர்களும், அசுரர்களும் பார்கடலை கடைந்த போது, 14 விதமான பொருட்கள் தோன்றின. அவற்றில் ஒன்று, மதுபானம். மதுபானம் தொடர்பாக, அப்போது சண்டையே நிகழ்ந்துள்ளது.
பண்டைக் காலங்களில், கடவுளுக்கு மதுபானத்தை படைத்து வழிபாடும் நடத்தி உள்ளனர். எனவே, மதுபானக் கூடங்களுக்கு செல்வதையும், மது அருந்துவதையும், மதம் மற்றும் கலாசாரத்தின் பெயரில் எதிர்ப்பது சரியல்ல. இவ்வாறு, அவர் கூறினார். dinamala.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக