வியாழன், 10 ஜூலை, 2014

America H1B விசாவுக்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு ! இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக வழக்கு !

புதுடில்லி:அமெரிக்காவுக்கு தற்காலிக பணியாளர்களாக செல்லும், இந்தியர்களுக்கு வழங்கப்படும், 'எச்1பி' விசாவுக்கு, அந்நாட்டு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிவதற்காக, 'எச்1பி' விசாவை அந்நாட்டு அரசு வழங்குகிறது. ஆண்டுதோறும், 85 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுகின்றன.இந்த விசாவை பெற்றவர்கள், ஆறு ஆண்டுகள் வரை, அமெரிக்காவில் தங்கியிருந்து பணிபுரியலாம். அமெரிக்காவில், ஏறக்குறைய ஆறு லட்சம் பேரிடம் இந்த விசா உள்ளது.இந்நிலையில், அதிகளவு இந்தியர்களுக்கு, இந்த விசா வழங்கப்படுவதால், தங்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுவதாக, அமெரிக்கர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.


அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளராக, கேஹ்லி என்பவர் பணியாற்றி வந்தார். விவாகரத்தான இவருக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், அவருடைய பணியிடத்தில், இந்தியாவில் இருந்து, தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக, கேஹ்லி பணி நீக்கம் செய்யப்பட்டார். நிறுவனத்தின் இந்த முடிவை எதிர்த்து, அந்நாட்டு பெடரல் நீதிமன்றத்தில், அவர், வழக்கு தொடர்ந்தார். தன் மனுவில், 'நிறுவனம், அமெரிக்க மக்களிடம் இனவெறியுடன் நடந்து கொள்கிறது' என, கூறியிருந்தார். பெரும்பாலான பதவிகளில் இந்தியர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி, பல அமெரிக்கர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

திறமை குறைவு காரணமாக, அமெரிக்க பணியாளர்களுக்கு பதிலாக, இந்தியர்கள் நியமிக்கப்படுகின்றனர். மேலும் அமெரிக்கரை விட குறைவான சம்பளத்தில் வேலை செய்ய இந்தியர்கள் தயாராக இருப்பதாலும், அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக, நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக