வியாழன், 10 ஜூலை, 2014

.2 ஆயிம் கோடி படேலின் சிலை ! மெட்ரோ ரயிலுக்கு ரூ.100 கோடி! படேல் சிலைக்கு ரூ.200 கோடிஒதுக்கும் பட்ஜெட் !!

டெல்லி: நாட்டு மக்கள் விலைவாசி உயர்வால் பசியும் பட்டினியுமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க, மத்திய அரசு ரூ.200 கோடியை ஒதுக்கும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலின் பிரமாண்ட உயரச் சிலை குஜராத் மாநிலம் பாரூச் நகரில் உள்ள கேவாடியா பகுதியில் அமைக்கப்பட உள்ளது.
ஒற்றுமைச் சிலை என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள, உலகிலேயே உயரமான இச்சிலைக்கு, படேலின் பிறந்த தினமான கடந்தாண்டு அக்டோபர் 31ம்தேதி, அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
ரூ.2 ஆயிம் கோடி படேலின் சிலை மொத்தம் 182 மீட்டர் (597 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். மெகலோ மேனியாக் என்ற கொடிய மனவியாதி கும்பலிடம் மாட்டிகிட்டோம் பய புள்ளே முதல் கட்டமாக இந்த சிலை செய்ய ரூ.2074 கோடி செலவிட திட்டமிட்டுள்ளனர். தற்போது அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலைதான் 152 அடி உயரத்துடன் முதலிடத்தில் உள்ளது. சர்தார் வல்லபாய் படேல் சிலை அதை விட 2 மடங்கு உயரம் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய சிலை என்ற சாதனையை வல்லபாய் படேல் சிலை பெறும்.
இந்த சிலையை அமைக்கும் குஜராத் அரசுக்கு நிதி உதவியாக, ரூ.200 கோடி ஒதுக்குவதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். அதாவது மொத்த செலவில் 10 சதவீதத்தை மத்திய அரசு அளிக்கிறது.
நாட்டில் மக்கள் விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வரிகளை குறைக்க இந்த நிதியை பயன்படுத்தியிருக்கலாம். லக்னோ மற்றும் அகமதாபாத்தில் மெட்ரோ ரயில், திட்டம் அமைக்க ரூ.100 கோடியை மட்டுமே ஒதுக்கிய ஜெட்லி, சிலைக்கு 200 கோடியை ஒதுக்கியுள்ளார். மெட்ரோ திட்டத்தின் ஆய்வுக்கே அவர் ஒதுக்கிய நிதி போதாது.
மோடியை குளிர்விக்கவா? பட்டேலுக்கு சிலை வைப்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை என்றபோதிலும், முதல் பட்ஜெட்டிலேயே மக்களின் வரிப்பணத்தை இப்படி வாரி இறைக்கலாமா? ஜெட்லி, பிரதமர் மோடியை குளிர்விக்க இதுபோன்ற அறிவிப்பை வெளியிடலாமா? என்ற சர்ச்சை வெடித்துள்ளது.
மாயாவதி கதி என்ன? ஆட்சி கையில் இருக்கும் தைரியத்தில் உத்தரபிரதேசத்தில் முதல்வராக இருந்த பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி பார்க்குமிடமெல்லாம் கட்சி சின்னமான யானை சிலையை திறந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, தேர்தலில் அந்த கட்சிக்கு எதிராகவே முடிந்தது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக