வியாழன், 10 ஜூலை, 2014

பஞ்சாயத்து உத்தரவுப்படி 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் ! ஜார்கண்டில் கேவலம் !

10-Year-Old Raped Allegedly On Panchayat Chief's Order
பொகாரோ: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவரின் உத்தரவின்பேரில் 10 வயது சிறுமி அவரது பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள ஸ்வாங் குல்குலியா தவ்ரா கிராமத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபர் கடந்த திங்கட்கிழமை இரவு மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். இதை பார்த்த அந்த பெண்ணின் கணவர் குடிகாரரை அடித்து வெளியே விரட்டிவிட்டார். இதையடுத்து அந்த நபர் போதை தெளிந்ததும் பஞ்சாயத்தை கூட்டி பக்கத்துவீட்டுக்காரர் தன்னை தாக்கியதாக கூறினார். இதை கேட்ட பஞ்சாயத்து தலைவர் போபால் பாசி பக்கத்துவீட்டுக்காரர் தாக்கியதற்காக அவரது 10 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த குடிகார ஆசாமி பஞ்சாயத்தினர் கண் முன்பே சிறுமியை இழுத்துச் சென்று அருகில் உள்ள புதரில் வைத்து பலாத்காரம் செய்தார்.
அதன் பிறகு ரத்தப்போக்கால் அவதிப்பட்ட சிறுமியை புதரில் இருந்து அவரது தாய் அழைத்து வந்தார். இது குறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பலாத்காரம் செய்த நபர் மற்றும் போபாலை கைது செய்தனர். மேலும் சிறுமியின் சகோதரரும் கைது செய்யப்பட்டார். சிறுமியை பலாத்காரம் செய்தவரின் மனைவி அளித்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அதாவது சிறுமியை சீரழித்தவரின் மனைவியிடம் அவரது சகோதரர் தகாத முறையில் நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக