வெள்ளி, 6 ஜூன், 2014

கேரளா MLA ராஜினாமா ! சரிதா நாயரை ஹோட்டலில் பாலியல் பலாத்காரம் !

திருவனந்தபுரம்: கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி
பலரிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டவர் சரிதா நாயர். கேரள அரசியலில் இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் உம்மன்சாண்டியின் தனி உதவியாளர் டென்னி ஜோப்பன் கைது செய்யப்பட்டார்.  முதல்வர் உம்மன்சாண் டிக்கும் இந்த மோசடியில் பங்கு இருப்பதாகவும், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், சரிதா நாயர் 9 மாத சிறைவாசத்திற்கு பின்னர் ஜாமீ னில் விடுவி க்கப்பட் டார். பின்னர் அவர் நிருபர்களிடம், தன்னை காங்கிரஸ் எம்எல்ஏ. அப்துல்லா குட்டி திருவனந்தபுரத்தில் ஒரு ஓட்டலில் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து, அப்துல்லா குட்டி மீது திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


கடந்த சில தினங்களுக்கு முன் சரிதா நாயர் பலாத்காரம் தொடர்பாக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதில் தன்னை அப்துல்லா குட்டி பலாத்காரம் செய்தது உண்மைதான் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, அப்துல்லா குட்டி தனது எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று காலை கண்ணூரில் முதல்வர் உம்மன்சாண்டியை அப்துல்லா குட்டி சந்தித்து பேசினார். அப்போது, தான் ராஜினாமா செய்ய விரும்புவதாக முதல்வரிடம் கூறியுள்ளார். ஆனால் அதை உம்மன்சாண்டி ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. அப்துல்லா குட்டியின் சொந்த ஊர் கண்ணூர். பலாத்கார புகாரை தொடர்ந்து அவர் தனது குடும்பத்தை கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
இது குறித்து அப்துல்லா குட்டி கூறுகையில், ‘‘நான் எந்த தவறும் செய்யவில்லை என்மீது கூறப்பட்ட பலாத்கார புகாரில் எந்த உண்மையும் இல்லை. தேவையில்லாமல் பத்திரிகைகள் என்னை விமர்சிக்கின்றன. இதனால் எனது குடும்பத்தினர் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்’’ என்றார். dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக