புதன், 18 ஜூன், 2014

தமிழகத்தில் அம்பேத்கார் திரைப்படத்தை முடக்கி வைத்திருக்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவியின் தம்பி விஷ்வ சுந்தர்



தமிழ் சினிமாவில் இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் இருக்கிற பல ‘முற்போக்காளர்கள்’ அம்பேத்கர் திரைப்படத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தங்களை ஜாதி இந்துக்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டார்கள். கமலஹாசன் ரஜினி சத்யராஜ் போன்ற வாய் பெருத்த நடிகர்கள் மற்றும் சதா பெண் உரிமை முழக்கம் இடும் சுகாசினி போன்றோர் எல்லாம் அம்பேத்காரை திரைபடத்தை ஆஸ்காரின் தம்பி முடக்கியதை பற்றி முச்சு விடுவதில்லை ! 1998 ம் ஆண்டு, மெகா ஸ்டார் மம்முட்டி அண்ணல் அம்பேத்கராக நடித்த அம்பேத்கர் படம், ஜாபர் படேல் இயக்கத்தில் மற்றும் மத்திய சமூக நீதித்துறை (Social justice and empowerment, & தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் (National film development corporation)ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, இதர 9 பிராந்திய மொழிகள் பலவற்றிலும் டப் செய்யப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளி கொண்டுவருவதற்காக பலர் முயற்சிக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரின் டி சர்ட் (மும்பை விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பாக அக்டோபர் 2 ,2010 இல் நடந்த முப்பெரு விழாவில் (அம்பேத்கர்,பெரியார் ,காமராஜர் விழா ) வே.மதிமாறன், வேந்தன், லெமூரியன் முயற்சியில் தயாரான ) அம்பேத்கர் படம் பொறித்த பனியன் வெளியிடப்பட்டது..
இந்த நிகழ்வில் அண்ணன் கொளத்தூர் மணி, , தோழர் வே. மதிமாறன் கலந்து கொண்டனர்)
கலந்துரையாடல்:-
பின் 07.03.2010 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு ஓரத்தில் காலை 11மணியளவில் தோழர் மதிமாறன் முயற்சியில் ஒரு சிறிய கலந்துரையாடல். கலந்துகொண்டவர்கள், தோழர்கள் சசி, வேந்தன்,  லெமூரியன் & மகிழ்நன் (விழித்தெழு இளைஞர் இயக்க, மும்பை தோழர் )
தமிழகத்தில் வெளியிடப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் ஏன் வெளியிடப்படவில்லை? அதற்கு நாம் என்ன செய்வது? என்று விவாதம்.
பல முறைகளில் முயற்சிகள் செய்வது என்று முடிவெடுத்தோம். அதில் முதன்மையான முயற்சியாக தேசிய திரைப்பட துறையிடம் (N.F.D.C) அம்பேத்கர் திரைப்படம் குறித்த விவரங்களை கேட்பது, தமிழகத்தில் வெளியிடப்படாமல் இருப்பதற்கான காரணங்களை கேட்டு, அதை ஒரு புகாராக எழுதி கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
முதன் முயற்சி :-
அதன் அடிப்படையில், 31-03-2010 அன்று தோழர்கள் வே. மதிமாறன் சசி, வேந்தன், சுவன், நிதி, அசோக், விவேக்,லெமுரியன் உட்பட நண்பர்கள் எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழக (N.F.D.C) மேலாளர் செவ்வனே சந்தித்தார்கள்
அந்த சந்திப்பில்
“அம்பேத்கர் படம் பற்றிய விவரங்களை மும்பை தலைமை அலுவலகத்திடம் இருந்துதான் பெற முடியும்” என்றார் மேலாளர் . மேலும் இதன் விநியோக உரிமையை சென்னையில்தான் யாரோ! வைத்திருப்பதாக சந்தேகமாக சொல்வது போல் சொன்னார்.
“அவர் யாரோ அல்ல. அவர் பெயர் விஷ்வா (ஆஸ்கர் ரவியின் சகோதரர்)அவரிடம் பேசினோம். பணம் இருந்தால் இந்தப்படத்தை வெளியிட்டுவிடலாம். பணம் மட்டுமே இந்த படம் வெளியாக தடையாய் உள்ளது என்றார் விஷ்வா.”
“சரி, பணம்தான் பிரச்சினை என்றால், விஷ்வா சுந்தர் என்ற தனிநபரை நம்பி எப்படி பண உதவி செய்யமுடியும்? எவ்வளவு தொகை தேவைப்படும்? அதற்கு என்ன வரையறை? அவர் பெரும் லாப நோக்கமற்றுதான் அந்தத் தொகையை சொல்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று தோழர்கள் கேட்டார்கள்
சற்றும் எதிர்பாராத இந்த விவரங்களால் தடுமாறிய மேலாளர் பின்பு சுதாரித்து உதிர்த்த வார்த்தை “ VISHVAA SUNDAR (முழுப்பெயர் தெரிந்திருக்கிறது) IS A GOOD DISTRIBUTOR, HE RELEASED MANY FILMS” என்று சப்பை கட்டு கட்டினார்.
“அவர் ஒரு வியாபார ரீதியிலான பெரிய விநியோகஸ்தர், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் என்பதை நாங்களும் அறிவோம். இந்தப் படம் வியாபார ரீதியாக பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க முடியாது என்பது அவருக்கு நன்றாக முன்பே தெரிந்து இருக்கும். அப்படி இருந்தும் அம்பேத்கர் படத்தை N.F.D.C யிடம் இருந்து அவர் வாங்க வேண்டிய அவசியம் என்ன?
ஒரு வேளை அவர் தீவிரமான அம்பேத்கரிஸ்டா என்றால், அதுவும் இல்லை. அவர் ஒரு ANTI AMBEDKARIST. அதாவது அவர் ஒரு தீவிரமான இந்துமத உணர்வாளர். (பார்ப்பனர்)
டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வேறு யாரும் வாங்கி விடக்கூடாது. வேறு யாரும் வாங்கினால் இதை வெளியிட்டுவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இதை அவர் வாங்கியிருப்பாரோ ?
இதுபோன்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக, விஷ்வா சுந்தர் இதுவரை அம்பேத்கர் படம் சம்பந்தமான எந்த ஒரு சிறிய விளம்பரமோ ஏன் ஒரு துண்டறிக்கையோ, சின்ன பத்திரிகைச் செய்தியோ கூட வெளியிடவில்லை.
எனவே இதில் பணம் மட்டும் பிரச்சினை அல்ல எதோ உள்நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கிறோம். இதுவரை படத்தை வெளியிடாததற்கான காரணத்தை, அதைப் பற்றி விளம்பர படுத்தாதற்கான காரணத்தை நீங்கள் (N.F.D.C) விஷ்வா சுந்தரிடம் கேட்டிர்களா?
NFDC சென்னை கிளையின் மேலாளரை சந்தித்த போது அவர் மும்பையில் உள்ள NFDC யின் தலைமை அலுவலகத்தின் மேலாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொள்ளும்படி அவருடைய தொலைப்பேசி எண்ணை கொடுத்தார். நாம் அவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.
டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர் படம் இன்னும் தமிழில் வெளியாகாததன் காரணம் பற்றி கேட்டபோது “அதற்கான முழு காரணம் படத்தை தமிழில் வெளியிட வாங்கிய வினியோகிப்பாளரையே சாரும்.” என்றார்.
இந்த விஸ்வாஸ் சுந்தர் என்பவர் படத்தை வெளியிட எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவே இல்லை. இந்த படம் தமிழில் வெளியிட தயாராகி இருக்கிறது என்ற குறைந்தபட்ச தகவல் கூட பலருக்கும் தெரியவில்லை. பத்திரிகை துறையை சேர்ந்தவர்களுக்கே கூட தெரியவில்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஜூனியர் விகடன் மற்றும் தினமலரில் ‘பாபாசாகேப் அம்பேத்கர் படம் இன்னும் தமிழ்நாட்டில் வெளிவரவில்லை’ என்று செய்தி வெளியிட்டது. இப்படம் தமிழில் தயாரித்தாகிவிட்டது பற்றியும் இப்படம் விஸ்வா சுந்தர் என்ற வினியோகிப்பாளரிடம் தான் முடங்கியுள்ளது என்ற தகவல் பத்திரிக்கை துறையினருக்கு கூட தெரியவில்லை. இந்த அளவுக்கு விஸ்வாஸ் சுந்தர் என்பவர் படத்தை பற்றிய தகவல்களை வெளியே தெரியப்படுத்தவில்லை என்பது தான் இதன் பின்னணியில் உள்ள உண்மை. ஏன் இவர் தமிழ் சமூகத்திற்கு இப்படத்தைப் பற்றிய தகவல்களை தெரியபடுத்தவில்லை என்ற இந்த கேள்விகளை தலைமை அலுவலக மேலாளரிடம் கேட்ட போது,
“இதற்கு NFDC எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது” என்றார்.
“அப்படியென்றால் விஸ்வாஸ் சுந்தர், Dr.Babasaheb Ambedkar படத்தை தமிழில் வெளிக் கொண்டுவர முயற்சிக்காததால் ஒருவேளை அவர் படம் வெளிவராமல் முடக்கும் முயற்சியாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. அப்படி அவர் முடக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. அப்படி நேர்ந்தால் படத்தின் நிலையென்ன?” என்று கேட்டோம்.
அதற்கு அவர், “படம் வினியோகிப்பாளருக்கு படத்தை வெளியிட உரிமம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும். ஒருவேளை படம் வெளியாகவில்லையென்றால் உரிமம் மறுபடியும் NFDCக்கே திரும்பிவிடும்” என்றார்.
சரி, படத்தை வெளியிட எத்தனை வருடங்கள் அவருக்கு உரிமம் உண்டு என்று கேட்டதற்கு 5 வருடங்கள் என்றார். எப்போது அவருடைய உரிமம் காலாவதியாகிறது என்று கேட்டதற்கு அவர் கூறிய தகவல் திடுக்கிட வைத்தது.
“அவரின் உரிமம் வருகிற டிசம்பர் 2010 த்துடன் முடிகிறது.”
கடந்த ஐந்து வருடங்கள் படத்தை பற்றி வெளி உலகிற்கு தெரியாமல் படத்தை மூடக்கிவைத்ததற்கு விஸ்வாஸ் சுந்தர் என்ன காரணங்கள் சொன்னாலும் ஏற்கத்தக்கதல்ல! ஏனெனில் ஒருவேளை அவருக்கு படத்தை வெளியிடுவதில் நிதிப் பிரச்சனை இருந்தாலும் அதைப் பற்றி கூட தெரியப்படுத்தவிலை.
அம்பேத்கர் படம்
1999 ம் ஆண்டு, மெகா ஸ்டார் மம்முட்டி அண்ணல் அம்பேத்கராக நடித்த அம்பேத்கர் படம், ஜாபர் படேல் இயக்கத்தில் மற்றும் மத்திய சமூக நீதித்துறை (Social justice and empowerment, & தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் (National film development corporation)ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, இதர பிராந்திய மொழிகள் பலவற்றிலும் டப் செய்யப்பட்டது. குறிப்பாக தமிழில் நேரடியாக எடுக்கப்பட்ட படம்போல மிகச் சிறப்பாக டப்பிங் செய்யப்பட்டது. ஹிந்தியில் ரிலீஸ் ஆகிவிட்ட இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பை கோலிவுட்டின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆஸ்கார் ரவிச்சந்திரனின் சகோதரர் விஸ்வாஸ் சுந்தர் வாங்கி வைத்துகொண்டு, அதை வெளியிடாமல் முடக்கி வைத்திருந்தார்
இதுபற்றி விஸ்வாஸ் சுந்தரின் கருத்தைத் தெரிந்துகொள்ள அவரது கைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டோம். இரண்டு தினங்கள் முயற்சித்தும் முடியவில்லை. அவரது அலுவலக வட்டாரத்தில் விசாரித்த வகையில், அம்பேத்கர் படத்தைக் கைமாற்றி விட அவர் முயற்சித்துவருவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி
டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளிகொண்டுவர வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் சத்தியசந்திரனுக்கும், தமிழக தியேட்டர்களில் வெளியிட்ட தமுஎச, தேனி மாவட்டத்தில் தோழர் மதியவன் & தோழர்கள், அதை வெளியிடுவதற்காக ஆகும் செலவு தொகையில் ரூ. 6 லட்சத்தை தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்ட மரியாதைக்குரிய எடிட்டர் லெனினுக்கும் – அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிடுவதற்காக முயற்சி செய்த எங்கள் குழு சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் சினிமாவில் இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் இருக்கிற பல ‘முற்போக்காளர்கள்’ அம்பேத்கர் திரைப்படத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தங்களை ஜாதி இந்துக்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எடிட்டர் லெனின் அம்பேத்கர் பட வெளியீட்டில் தன் பங்களிப்பின் மூலமாக அவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார்.
தமிழக அரசு :-
மற்ற தலைவர்களின் படத்தை விளம்பரம்செய்த அரசு அம்பேத்கர் திரைப்படத்தை தீண்டப் பயப்படுகிறது.
எப்படியோ 1999 ம் ஆண்டே ஆங்கிலத்தில் வெளியான அம்பேத்கர் திரைப்படம் , 2000 ல் இந்தியிலும், தொடர்ந்து மராட்டி , மலையாளம் என இந்தியாவிலுள்ள 9 தேசிய மொழிகளில் வெளியாகிவிட்டது. ஆனால் பகுத்தறிவு பற்றியெரிந்த தமிழ்நாட்டில் இத்திரைப்படம் 12 ஆண்டுகளாகத் தலைகாட்ட முடியவில்லை.
1800 திரையரங்குகளை வைத்துக்கொண்டு 200 கோடி 300 கோடி என்று மார்தட்டிப் படங்களை வெளியிடும் தமிழ்நாட்டில்தான் விநியோக உரிமை வாங்கியும் 5 வருடங்களாக கிடப்பிலேயே போடடப்பட்டிருந்தது அம்பேத்கர் திரைப்படம்.

வெளியிட நடந்த முயற்சியில் ஈடுப்பட அமைப்புகள் :
வே.மதிமாறன், லெமூரியன், வேந்தன், கோவை பெ. தி. க, ஸ்ரீதர்,மும்பை விழித்தெழு இயக்கம், தேனீ மாவட்ட SC /ST ஊழியர்கள் கூட்டமைப்பு, தேனீ மதியவன் , கோவையில் ஆதித் தமிழர் விடுதலை முன்னணி தோழர்கள்,
ஏப்ரல் 2010 , SC /ST ஊழியர்கள் கூட்டமைப்பு தேனி மாவட்டத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. இறுதியாக மதிப்புமிகு வழக்கறிஞர் சத்தியச்சந்திரன் தொடர்ந்த வழக்கின் பயனாக, அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட உயர் நீதிமன்றம் NFDC க்கு ஆணையிட்டது. இதற்கெல்லாம் பிறகுதான், பாராட்டு விழாக்களில் படுத்திருந்த நமது மாண்புமிகு முதல்வர் விளீரென எழுந்துவந்து 10லட்சம் நிதி உதவி தந்து உணர்ச்சிவசப்பட்டார். NFDC யும் டிசெம்பர் 3 ல் படத்தை வெளியிடுவதாக அறிவித்தது.
உயர் நீதிமன்ற ஆணையை மறுக்க முடியாத NFDC யும் தமிழக அரசும் கடமைக்கு 4 திரையரங்குகளில் படத்தை திரையிட்டுவிட்டு விளம்பரமே செய்யாமல் இருட்டடிப்புச் செய்திருந்ததை உணர்ந்தோம்.
கோவையில் இத்திரைப்படத்தை திரையிட பெரியார் திராவிடர் கழகம் முயற்சித்து வருவதை அறிந்து அதன் பொதுச் செயலாளர் தோழர்.இராமகிருட்டிணனை சந்தித்த போது, கோவை சென்டிரல் திரையரங்கு தயாராக இருப்பது தெரிந்து மகிழ்ச்சியடைந்த தோழர்கள் பெ.தி.க விற்குப் பற்றாக்குறையாக இருந்த 60 ஆயிரம் ரூபாயை தந்து உதவினர்.
படம் இரண்டுகாட்சிகளாக ஒருவாரம் திரையிடப்பட்டது, நல்ல வரவேற்பைப் பெற்றது அம்பேத்கர் திரைப்படம். வந்த லாபத்தில், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு, பணம் கொடுத்தவர்களுக்கு திருப்பிக்கொடுக்கப்பட்டது. இரண்டுகாட்சிகள் மட்டுமே திரையிட்டு இரண்டு வாரத்திற்குள் அதிகபட்சமாக 7000 பேருக்குமேல் படம் பார்த்தனர்; படம் ஓடாது என்று சவடால் அடித்தவர்களுக்கு பதிலாக அமைந்தது மக்களின் ஆதரவு.
இந்த வெற்றியை சாத்தியமாக்கிய கோவை தோழர்கள் தமிழ்ச்செல்வன், கதிரவன் , மகேந்திர குமார், தினேஷ் ,அரவிந்த், வழக்கறிஞர் கார்கி மற்றும் பெரியார் திராடவிடர் கழகத் தோழர்களுக்கும் நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.
கோவையில் ஆதித் தமிழர் விடுதலை முன்னணி தோழர்களும், கோவை சோமனூரில் படத்தை திரையிட்டார்கள்…
ஒடுக்கப்பட்ட மக்கள், ஒரு திரைப்படத்திற்குக் கூட இவ்வளவு தூரம் போராடவேண்டியுள்ளது” என்பதை உணர்ந்திருந்தது!
‘அம்பேத்கர் திரைப்பட பரப்புரைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு’
அம்பேத்கரையும், அவரின் எழுத்துகளையும் தமிழில் அறிமுகம் செய்யப் பாடுபட்ட தந்தைப் பெரியாரின் கைத்தடியைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவந்து ஆட்சியமைத்த தி.மு.க. அரசு, அம்பேத்கரை மக்களிடம் எளிமையாக கொண்டுசெல்லவிருந்த இத்திரைப்படத்தை திட்டமிட்டே தடுத்துவிட்டது.
முதல்வரின் மூச்சிரைப்பைக்கூட விமர்சிக்கிற ஜெயலலிதா, அம்பேத்கர் படம் பற்றிய அரசின் அலட்சியம் குறித்து வாய் திறக்கவே இல்லை. காரணம், அதே அலட்சியம் அவரிடமும் இருந்ததால். இவர்கள் இந்த நாட்டின் மிகப் பெரிய தலைவர்கள்.
மறுபடியும் NFDC யை தொடர்புகொண்ட பிறகுதான் மார்ச் 6 ம் தேதியோடு, அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கான உரிமம் முடிந்துவிட்டது என்பது தெரியவந்தது.
பின்
டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை மறு வெளியிடுவது அல்லது தமிழில் குறுந்தகடு கொண்டு வருவது என முயற்சியில் உள்ளோம்.. இதன் முதன் செயல்திட்டமாக, ஜனவரி 30,2012 அன்று தோழர்,எடிட்டர் லெனினும்,( தமிழ்நாட்டில் முதன்முதலில் டிசம்பர்,ஜனவரி 2011 அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்தவரில் இவரும் முக்கியமானவர் ) நானும் எக்மோரில் உள்ள NFDC அலுவலகத்தில் பி.ராமு (Asst . Manager -Film /Production of NFDC,Chennai Branch ) அவர்களே சந்தித்து மறு படியும் வெளியிட வேண்டும் என் கேட்டுகொண்டோம் ...
பின், மறு வெளியிடுவதில் சில சிக்கல்கள் உள்ளதால்.... தமிழில் குறுந்தகடு கொண்டுவருவது என முடிவு செய்தோம்..
NFDC சென்னை , மும்பை மற்றும் டெல்லி அலுவலகத்திற்கு 3000 குறுந்தகடுகள் தயாரித்து தரவேண்டி விண்ணப்பித்து உள்ளோம்...
26 /7 /12 அன்று B .Ramu (asst manager film production of nfdc chennai ) அவர்களே தொடர்பு கொண்டு கேட்டப்போது அவர் dvd /cd தயாரிக்கும் உரிமை எங்களிடம் இல்லை என்றார் நீங்கள் மும்பை nfdc அலுவலகத்தை சார்ந்த rajesh das அவர்களே தொடர்பு கொள்ள சொன்னார். அவரோ அந்த உரிமை எங்களிடம் கிடையாது நீங்கள் social justice and empowernment தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னார் இப்போது நாங்கள் சோசியல் ஜஸ்டிசே அண்ட் எம்போவேர்ந்மேன்ட்க்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.
தமிழக திரைப்பட இயக்குனர் சங்கத்திடம் social justice and empowernment பரிந்துரை செய்ய சொல்லி கடிதம் கேட்டு உள்ளோம்..
நாங்கள் மக்கள் வரி பணத்தில் உருவான அண்ணல் அம்பேத்கர் படத்தை (dvd ) இலவசமாக கேட்க வில்லை... அதற்கு வேண்டி பணத்தை தர தயாராக உள்ளோம்.
ஒடுக்கப்பட்ட மக்கள், ஒரு திரைப்படத்திற்குக் கூட இவ்வளவு தூரம் போராடவேண்டியுள்ளது. mathimaran.wordpress.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக