வியாழன், 19 ஜூன், 2014

ஜெ.,சொத்து குவிப்பு வழக்கில் 5 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு !

பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், ஐந்து கம்பெனிகளுக்கு, 'சீல்' வைத்ததை எதிர்த்தும், நிறுவனங்களை தங்களிடம் ஒப்படைக்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடியானது. நேரத்தை வீணடித்ததாக கூறி, ஒவ்வொரு கம்பெனிக்கும், தலா, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக, சென்னையில் உள்ள மெடோ அக்ரோ பார்ம், லெக்ஸ் பிராப்பர்ட்டி பிரைவேட் லிமிடெட், சையனோரா, ரிவர்வே அக்ரோ பார்ம், ராம்ராஜ் அக்ரோ பார்ம் ஆகிய ஐந்து நிறுவனங்களில், 1997ல், சென்னை ஊழல் தடுப்பு போலீசர் சோதனையிட்டு, 'சீல்' வைத்தனர்.  ஐயோ 50,000 ரூபாயா? மிக அதிகம், இதை கட்ட பணம் இல்லை, எனவே உச்சநீதிமன்றத்தில் முறையீடு?
இதை எதிர்த்தும், நிறுவனங்களை தங்களிடம் ஒப்படைக்க கோரியும், ஐந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிந்திருந்த நிலையில், நேற்று, தீர்ப்பளிக்கப்பட்டது.நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தீர்ப்பில் கூறியதாவது:
சொத்து குவிப்பு வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில், இந்த நிறுவனங்கள் மனு தாக்கல் செய்துள்ளன. எனவே, இந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறேன். அத்துடன், ஒவ்வொரு நிறுவனத்துக்கும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஏழு நாட்களுக்குள், இந்த அபராத தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் உத்தரவிட்டார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக