பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு
வழக்கு விசாரணையில் ஜெயலலிதாவின் புகழை கெடுக்க திமுக ஆட்சியில்
ஜோடிக்கப்பட்ட பொய்யான வழக்கு என்று ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர் வாதம்
செய்தார்.
பெங்களூரு சிறப்பு நிதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடந்த வழக்கு விசாரணையின் போது, ஜெயலலிதா தரப்பில் இறுதிக்கட்ட வாதத்தை வழக்குரைஞர் குமார் எடுத்துரைத்தார். அப்போது 1991 ஆம் ஆண்டு முதல் 96 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா பணியாற்றினார். அதற்கு பிறகு திமுக அரசு ஆட்சியைப் பிடித்தது.
அப்போது ஜனதா கட்சி தலைவராக இருந்த சுப்ரமண்யசுவாமி சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் அப்போதை தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டி.எஸ்.பியாக பணியாற்றிய நல்லம்மாநாயுடுவை விதிகளை மீறி திமுக அரசு எஸ்.பியாக பதவி உயர்த்தி சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
தகுதியில்லாத ஒருவர் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டதே முதலில் தவறு. சட்டப்படி அவர் உரிய விசாரணை நடத்தவில்லை. ஜெயலலிதாவின் புகழை கெடுக்க திமுக ஆட்சியில் ஜோடிக்கப்பட்ட பொய்யான வழக்கு இது. இதில் சாட்சியங்கள் அளித்த சாட்சியம் நம்ப தகுந்ததாக இல்லை என்று அவர் வாதிட்டார். அரசு தரப்பில் வழக்குரைஞர் பாவனிசிங், அவரது உதவியாளர் முருகேஷ் மராடி உள்ளிட்டோர் வழக்கு விசாரணையில் கலந்து கொண்டனர். ஜெயலலிதா தரப்பு வாதம் வெள்ளிக்கிழமையும் தொடர நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக