ஞாயிறு, 1 ஜூன், 2014

திருப்பதி தேவஸ்தான தங்குவிடுதிகளில் மெகா டிவிக்கள் ! விஐ பி பக்தர்களுக்கு தாராள வசதி ! ஏழை பக்தர்களுக்கு கோவிந்தா ?

திருப்பதி வைகுண்டம் தங்குமிட வளாகத்தில் ரூ.2.55 கோடி மதிப்பில் 108 இன்ச் ராட்சத டி.வி. வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு பக்தர்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.
பக்தர்களின் அடிப்படை வசதிக ளுக்கு முன்னுரிமை வழங்காமல், ஆடம்பர பொருட்கள் வாங்க திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித் துள்ளதற்கு பக்தர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
திருமலைக்கு அடிப்படை வசதிகள், வளர்ச்சி பணிகள் குறித்து அறங்காவலர் குழு முடிவெடுக்காமல், ரு. 2.55 கோடி செலவில் 108 அங்குல ராட்சத டிவிக்கள் தேவைதானா எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், தொடர்ச்சியாக 2 நாட்கள் விடுமுறை வந்தால், திருமலையில் பக்தர்கள் படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.
திருமலையில் விசேஷ நாட்க ளில் 60ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அதுவே பிரம்மோற்சவம் போன்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம் ஒரு லட்சத்தை தாண்டுகிறது. ஆனால் இது போன்ற நாட்களில், பக்தர்களுக்கு தங்கும் விடுதிகள் கிடைக்காது.
வெயில், பனி, மழை, குளிர் என இயற்கை உபாதைகளில் விடுதிகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் பக்தர்களுக்கு, பால், சிற்றுண்டி, தயிர், எலுமிச்சை சாதங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வரிசையில் உள்ள பக்தர்களுக்கு குடிநீர், மோர் ஆகியவை மட்டுமே வழங்கப் படுகின்றன.
திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் வெள்ளிக் கிழமை, அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் பாபிராஜு தலைமையில் நடந்தது. இதில், வைகுண்டம்-1 காம்ப்ளக்ஸில் ரூ. 300 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக, ரூ. 2.55 கோடி செலவில் 108 அங்குல ராட்சத கலர் டிவிக்கள் வாங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
மேலும் ரூ. 12.85 கோடி செலவில் 30 லட்சத்து 60 ஆயிரம் கிலோ அரிசி வாங்கவும், 15 ஆயிரம் வெள்ளி டாலர்கள் வாங்கவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க ரூ.12.25 கோடியும், தற்காலிக தேவஸ் தான வனத்துறை பணியாளர்கள் நியமனத்திற்கு, ரூ. 1.95 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திருமலைக்கு சுவாமி தரிசனத் திற்கு வருபவர்களுக்கு போதிய தங்கும் இடம், குடிநீர், தரிசன ஏற்பாடு போன்ற வற்றை செய்தாலே போதும் என்றும், ராட்சத டிவிக்கள், ஏ.சி. போன்ற ஆடம்பர செலவுகள் தேவையற்றவை எனவும் சாதாரண பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக