புதன், 11 ஜூன், 2014

திருப்பதியில் யோகா மையத்தை திறக்க ராம்தேவுக்கு சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்

சீமாந்திரா முதலமைச்சராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடுவை நேற்று யோகா குரு ராம்தேவ் சந்தித்து பேசினார். நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்த ராம்தேவிடம் சீமாந்திராவில் உள்ள திருப்பதியில் மிகப்பெரிய யோகா மையத்தை திறக்கவேண்டும் என்று நாயுடு கேட்டுக்கொண்டார். அத்துடன் அங்கு மருத்துவ மூலிகை பண்ணையையும் தொடங்கவேண்டும் என்றும் அவரிடம் நாயுடு கூறினார்.இது குறித்து ராம்தேவ் கூறுகையில், சந்திரபாபு நாயுடு எனது சகோதரரை போன்றவர். அவரது விருப்பத்தை நான் பரிசீலித்து நல்ல முடிவெடுப்பேன் என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது நாயுடுவின் மகன் லோகேஷ் உடனிருந்தார்  அழகான பெண்களின் படங்களை தான் நீங்க ரசிப்பீங்களா என்ன ?  (அழகான ?) இரண்டு  ஆண்களின்  அணைப்பு காட்சியை ரசிக்க முடியாதா என்ன ? காபரெட் சாமியும் காபரெட் அரசியல் கில்லாடியும் சேர்ந்த என்ன நடக்கும் ? காசு காசு காசு ?  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக