ஞாயிறு, 29 ஜூன், 2014

பாஹுபாலி ! அனுஷ்கா தமன்னா இரண்டு சூப்பர் ஹீரோயின்களும் இணைந்து சண்டை காட்சி

அனுஷ்காவுடன் சண்டைக்கு தயார் ஆகிறார் தமன்னா.தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘பாஹுபலி படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. அவருடன் தமன்னாவும் இணைந்து நடிக்கிறார். ராணி வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா இப்படத்துக்காக கத்தி சண்டை பயிற்சி பெற்று சமீபத்தில் போர்க்கள காட்சிகளில் நடித்தார். அவரைத் தொடர்ந்து தமன்னாவும் ஸ்டன்ட் மற்றும் வாள் சண்டை பயிற்சி பெற்றுள்ளார். இதற்காக அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக்கும் பயிற்சிக்காக ஜிம்மிற்கும் சென்று வருகிறார். இதுவரை தமன்னா இதுபோன்ற சண்டை காட்சிகளில் நடித்ததில்லை என்பதால் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
ஆயுதம் தாங்கிய உடை அணிந்து எதிரிகளை எதிர்த்து போர் புரியும் காட்சியில் தமன்னா நடிக்க உள்ளார். இதற்கான ஷூட்டிங் தொடங்கிவிட்டதால் சண்டை காட்சிகளில் தமன்னா நடித்து வருகிறார் என்று தமன்னா தரப்பில் கூறப்படுகிறது. அனுஷ்காவுடனும் சில காட்சிகளில் தமன்னா இணைந்து சண்டை காட்சிகளில் நடிக்க உள்ளார். - See tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக