சனி, 21 ஜூன், 2014

இந்தி கட்டாயம்:இந்தி பேசும் மாநில சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம்: மத்திய அரசு

பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு பதில் கண்டிப்பாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
உள்துறையின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்தி திணிப்பை பிரதமர் கைவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞரும் கேட்டுக்கொண்டார்.
இந்தி மொழியை மத்திய அரசு நிர்வாகத்திலும் மாநிலங்களின் மீதும் திணிக்க முற்படுவது, இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடாக முடியும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டிருந்தார். இவ்வாறு பரவலாக எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதில், சமூக வலைத் தளங்களில் இந்தி மொழியை ஊக்குவிக்கும் உத்தரவு இந்தி பேசும் மாநிலங் களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக