ஞாயிறு, 15 ஜூன், 2014

உப்பு அம்மாக்கு அடுத்து அம்மா டீ ! அம்மா தேயிலை தூள் !

 அம்மா டீ, அம்மா டீ" என்று 2 முறை சொல்லி பாருங்கள். ரயில்வே ஸ்டேஷனில் நாமே கூவி கூவி டீ விற்பது மாதிரி இல்லை? உப்பின் கதிதான் டீ தூளுக்கும். ஆட்சியின் அவலம் தெளிவாக தெரிகிறது. இதிலே தமிழகம் ரோல் மாடல் என்ற பெருமை வேறு,
சென்னை: 'அம்மா உப்பு' விற்பனையைத் தொடர்ந்து, 'அம்மா டீத்தூள்' விற்பனையை துவக்குவது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.தமிழகத்தில், 2006 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., இலவச கலர், 'டிவி' வழங்குவது உட்பட, பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்து, ஆட்சிக்கு வந்தது.<தாலிக்கு தங்கம்:அதைத் தொடர்ந்து, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஏராளமான, இலவச அறிவிப்புகளை வெளியிட்டது. ஆட்சிக்கு வந்ததும், தேர்தலின் போது அறிவித்தபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு, 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இலவச கால்நடை, தாலிக்கு தங்கம், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம் ஆகியவை துவக்கப்பட்டன. அதன்பின் சென்னை மாநகராட்சியில், 'அம்மா உணவகம்' துவக்கப்பட்டது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அனைத்து மாநகராட்சிகளிலும், 'அம்மா உணவகம்' துவக்கப்பட்டுள்ளது.அம்மா பிராந்தி கடை அம்மா டாஸ்மாக் எல்லாம் ஆரம்பிச்சி கொஞ்சம் விலையை குறைங்கம்மா ?
போக்குவரத்துக் கழகம் சார்பில், 'அம்மா குடிநீர்' விற்பனை துவக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை சார்பில், 'அம்மா மலிவு விலை காய்கறி கடை' துவக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனம் சார்பில், 'அம்மா உப்பு' விற்பனை துவக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு அமைச்சர் மற்றும் அதிகாரிகள், தங்கள் துறை சார்பில், 'அம்மா' பெயரில் எதை துவக்கலாம் என, ஆலோசிக்க துவங்கி உள்ளனர். இதன் ஒரு கட்டமாக, வனத்துறையினர், 'அம்மா டீத்தூள்' விற்பனை துவக்குவது குறித்து, ஆலோசித்து வருகின்றனர். தற்போது, தமிழ்நாடு சிறு தேயிலை விவசாயிகளின் தொழில் கூட்டுறவு தொழில்நுட்ப இணையம் சார்பில், ரேஷன் கடைகளில், 'ஊட்டி டீத் தூள்' விற்பனை செய்யப்படுகிறது.

'அம்மா டீத்தூள்':

இதன் பெயரை மாற்றி, 'அம்மா டீத்தூள்' என்ற பெயரில், மலிவு விலையில், டீத்தூள் விற்பனையை துவக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, ஆலோசனை நடந்து வருகிறது. ஆனால், முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அம்மா வார சந்தை:

'சென்னை மாநகராட்சியில், 'அம்மா வார சந்தை, அம்மா தியேட்டர்' அமைக்கப்படும்' என, மேயர் சைதை துரைசாமி மாநகராட்சி பட்ஜெட்டின் போது அறிவித்தார். அதன்படி, வார சந்தை மற்றும் அம்மா தியேட்டர் அமைக்க, இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக