வெள்ளி, 6 ஜூன், 2014

நவாஷ் ஷெரீப் அதிருப்தி ! இந்தியா போதிய மதிப்பு கொடுக்கவில்லை ?

இந்தியா வந்த போது  தனக்கு சரியான மதிப்பு கொடுக்கவில்லை என்று நவாஷ் ஷெரீப் அதிருப்தியில் உள்ளாதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஊடகம் வெளியிட்டு செய்தியில் பாகிஸ்தானின் ஆளும் கட்சியான முஸ்லீம் லீக் கட்சி(என்)யில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த தலைவர் ஒருவர். இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாக கூறப்படுவது: 

இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் நவாஷ் ஷெரீப் கலந்து கொண்டபோது  அவருக்கு சரியான மதிப்பு கொடுக்கவில்லை .அதனால் அவர் மிகுந்த அதிருப்தியில் உள்ளார் என்றுதெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் கூறியுள்ளது.
மேலும் பதவியேற்பு விழாவிற்கு பின் நவாஷ் ஷெரீப் அளித்த பேட்டியின் போது மிக கவனமாக வார்த்தைகளை வெளியிட்டார். இந்த பயணத்தால் ஒரு எந்த பயனும் ஏற்படவில்லை என்று மூஸ்லீம் கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர் கூறீயதாக தெரிவித்துள்ளது dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக