வெள்ளி, 6 ஜூன், 2014

ஐரோப்பாவில் தஞ்சம் பெற முயன்ற 2500 பேர் இத்தாலிய கடற்படையால் ஒரே நாளில் மீட்பு

புகலிடம் தேடி சட்டவிரோதமாக ஐரோபாவுக்குள் நுழைய முயன்ற 2500 பேர்
கடந்த 24 மணி நேரத்தில் மீட்கப் பட்டதாக இத்தாலிய கடற்படை அறிவித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் 17 படகுகளில் மத்திய தரைக் கடல் பகுதி வழியே புகலிடம் தேடி சுமார் 2500 பேர் ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்றனராம். இது குறித்து இத்தாலிய கடற்படை அதிகாரிகள் கூறியபோது, சான் ஜியார்ஜியோ என்ற கப்பல் அதிக பட்சமாக 998 பேருடன் வந்தது. இதில் 214 பேர் பெண்கள், 157 பேர் சிறுவர் சிறுமியர்.

இந்த மீட்பு நடவடிக்கையில், நான்கு வர்த்தக கப்பல்களும் ஈடுபட்டனவாம். ஆப்பிரிக்க நாடுகள், எரித்ரியா, சிரியா, லிபியாவிலிருந்து இந்தக் கப்பல்கள் வந்ததாக இத்தாலிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இவ்வாறு அகதி மக்களை ஏற்றி வரும் கப்பல்கள் கடலில் விபத்துக்கு உள்ளாகி ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளதாகவும், மீன்பிடி படகுகளில் கூட ஆட்களை அளவுக்கு அதிகமாக சிலர் ஏற்றி வருவதாகவும், இந்த மனிதக் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக