திங்கள், 2 ஜூன், 2014

மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துக்கள்: சோதங்கரிடம் 7 மணி நேரம் விசாரணை


மோடிக்கு எதிராக தனது பேஸ்புக்கில் அவதூறு செய்ததாக புகார் எழுப்பப்பட்ட தேவு சோதங்கர் இன்று கோவா போலீஸ் முன்பு ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.
இன்று காலை 10.45 மணியளவில் சைபர் கிரைம் பிரிவில் ஆஜரான சோதங்கரை அவரது வழக்கறிஞர் முன்னிலையில் காவல்துறை உயரதிகாரி கார்த்திக் காஷ்யப் விசாரணை செய்தார்.
இதற்கிடையே சோதங்கர் மீது விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் போலீஸ் நிலையத்தில் கூடினர். அவர்கள் கடைசி வரையில் அங்கேயே இருந்துள்ளனர்.
விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த சோதங்கர், சட்ட அமலாக்கப் பிரிவின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அவரது பேஸ்புக் கருத்துக்கள் அரசியல் சட்டத்தை அவமரியாதை செய்தவர்களுக்கு எதிரானதே என்றார்.
< அவரது வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முதாலிக் பாஜக-வில் சேர்க்கப்பட்டதையடுது சோதங்கர் பேஸ்புக்கில் தனது பதிவை வெளியிட்டார். ஆனால் கட்சியில் அவருக்கு இடமில்லை என்று தெரிந்தவுடன் தனது பதிவை உடனே நீக்கிவிட்டார்.

மேலும் சோதங்கர் தலைமறைவாகிவிடவில்லை, அவர் விசாகப்பட்டிணத்தில் கடமை நிமித்தமாகச் சென்றிருந்தார். போலீசாரிடம் தான் ஆஜராவதற்கு கால அவகாசமும் அவர் வாங்கியிருந்தார்” என்றார்.tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக