ஞாயிறு, 15 ஜூன், 2014

34 தி.மு.க. மாவட்டங்களை 70 ஆக உயர்த்த 6 பேர் குழு யோசனை !

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தமிழகத்தில் 34 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், எந்த தொகுதியிலும் வெற்றி பெற வில்லை. கன்னியாகுமரி, தருமபுரியில் ‘டெபாசிட்’ இழுந்தது.
இதையடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. உயர்மட்ட செயல்திட்ட குழு கூட்டத்தில் தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் கட்சியின் நிர்வாக அமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கட்சி சீரமைப்பு மற்றும் கூடுதல் மாவட்ட செயலாளர்களை நியமிப்பது குறித்து அறிக்கை தயாரித்து வழங்குவதற்காக 6 பேர் கொண்ட குழுவை தலைமை கழகம் நியமனம் செய்தது. இன்னும் நெறைய ஸ்டாலின் ஆட்களுக்கும் இதர வாரிசுகளுக்கு பதவி கொடுக்கலாம்னே ?

அதில், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, கலசப்பாக்கம் திருவேங்கடம், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், திருத்துறைப்பூண்டி கல்யாண சுந்தரம், ஈரோடு சச்சிதானந்தம், வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றனர்.
கடந்த வாரம் 6 பேர் குழு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரை முருகன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியது.
அப்போது, தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் பிரச்சினை, கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஆகியவை குறித்து விரிவான அறிக்கை அழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. கட்சியை 2016 பொதுத் தேர்தலுக்கு முன்பு பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் கேட்கப்பட்டன.
அதை தொடர்ந்து தி.மு.க. மாவட்டங்களை பிரிப்பது, மாவட்ட செயலாளர்களை மாற்றுவது, புதிய செயலாளர்கள், நிர்வாகிகளை நியமனம் செய்வது மற்றும் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து 150 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்த அறிக்கை நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டது. அதில், தற்போது தி.மு.க.வில் இருக்கும் 34 மாவட்டங்களை 70 ஆக பிரிக்க வேண்டும். சென்னையை 6 அல்லது 7 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்.
மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்களுக்கான தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கக் கூடாது என்று யோசனை கூறப்பட்டுள்ளது.
தேர்தலின் போது சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் யார்? மாவட்ட செயலாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத வேட்பாளர்கள் யார்? கோஷ்டியாக பிரிந்து செயல்பட்டது யார் யார்? கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் யார்? என்பது பற்றிய விவரங்களும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இது குறித்து தி.மு.க. தவைலர் கருணாநிதி ஆலோசித்து வருகிறார்.
6 பேர் குழு அறிக்கையின் அடிப்படையில் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மாற்றங்கள் குறித்து செயற் குழு, பொதுக்குழு கூடி முடிவு செய்து ஒப்புதல் வழங்கும்.
அதன்படி, நிர்வாக ரீதியான முடிவுகள் எடுக்கப்படும். மாவட்டங்களை பிரிப்பது, மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை மாற்றுவது, வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி முறைப்படி அறிவிப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக