திங்கள், 26 மே, 2014

மும்பை : ஆளில்லா விமானம் மூலம் Pizza டெலிவரி செய்த ஹோட்டல் மீது வழக்கு

ஆளில்லா குட்டி விமானம் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு பீட்சா
விநியோகம் செய் தது தொடர்பாக, பீட்சா நிறுவனத் தின் மீது வழக்குப் பதிவு செய் துள்ள மும்பை போலீஸார், அந்நிறுவனத்திடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கடந்த 11-ம் தேதி மும்பை யைச் சேர்ந்த ‘பிரான்ஸெஸ்கோ பிஸ்ஸாரியா’ எனும் பீட்சா நிறுவனம் ஆளில்லா குட்டி விமானம் மூலம், கடையிலி ருந்து 1.5 கி.மீ. தொலைவில் லோயர் பரேல் என்ற இடத்திலுள்ள வாடிக்கையாளரின் வீட்டில் நேரடி யாக பீட்சாவை விநியோகம் செய்தது. முதன்முறையாக இம் முயற்சியைச் செய்த அந்நிறு வனம், இதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக இணைய தளங்களில் வெளியிட்டது.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் என்பதால், முன் அனுமதி பெறாமல் குட்டி விமானத்தைப் பறக்க விட்டது தொடர்பாக மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். youtube இல் பார்த்துதான் நடவடிக்கை எடுத்ததாக போலீசார் தெரிவிப்பு ! பேசாம போலீஸ் இலாகாவை மூடிவிடாலாம் நீதிமன்றங்களே நேரடியாக youtube அல்லது facebook பார்த்து .....

இது தொடர்பாக, காவல்துறை கூடுதல் ஆணையர் மதுகர் பாண்டே கூறியதாவது:
பாதுகாப்பு காரணங் களுக்காக ஆளில்லா வாக னத்தை, மும்பை போலீஸின் அனுமதி பெறாமல் இயக்கக் கூடாது. இது வானில் பறக்கும் வாகனங்களுக்கும் பொருந்தும். அந்த பீட்சா நிறுவனம் இதற்காக அனுமதி பெறவில்லை. ஊடகங்க ளின் மூலம் இது எங்களின் கவனத்துக்கு வந்தது. இதுபோன்ற நிகழ்வுகள் மும்பையின் பாதுகாப் புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே அந்நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது” என்றார்.
இது தொடர்பாக அந்நிறுவனம் இதுபோன்ற ஆளில்லா விமானத் தைப் பறக்கவிடுவதற்கு அனுமதி கோரியதா என, மும்பை விமான நிலையத்திலுள்ள வான் போக் குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (ஏடிசி)-க்கும் மும்பை காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க தொடர்புடைய பீட்சா நிறுவனம் மறுத்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக