திங்கள், 26 மே, 2014

உபி கோராக்தம் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர விபத்து: 40 பேர் பலி ! பலர் படுகாயம் .

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சரக்கு ரயிலுடன்,  கோராக்பூர் சென்ற கோராக்தம்
எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 20 பேர் பலியாகியிருக்கலாம் என்று கூறப்பட்டது.. இந்நிலையில் 40 பேர் பலியாகியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 100க்கனக்கான பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மீட்பு பணியில் ஏராளமான தீயணைப்பு படையினர், போலீஸார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவனையில் சிசிக்கைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதே  தலைநகர் லக்னோவில் இருந்து 230 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சான்ட் கபீர் நகர் மாவட்டத்த்தில் சுரைட் ரயில் நிலையம் அருகே,  சரக்கு ரயிலும், கோரக்தம் எக்ஸ்பிரசும் இன்று காலை நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இந்த கோர விபத்தில் கோரக்தம் ரயிலின் 6 பெட்டிகள் கவிழ்ந்து  பலத்த சேதமடைந்தது. இந்த இடிபாடுகளில் 200க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர் dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக