ஞாயிறு, 4 மே, 2014

இவ்வளவு சொல்லியும் (jothika?) நடிக்கப் போறாரே ? (sivakumar?)

சென்னை: தனது மருமகள் மீண்டும் நடிக்க வருவது மார்க்கண்டேய மாமனாருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் அவர் மருமகள் மீது கோபத்தில் உள்ளாராம். சூர்யமான நடிகரின் மனைவி திருமணம் முடிந்த கையோடு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவருக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்தது. நம்ம குழந்தைகள் தான் வளர்ந்துவிட்டார்களே நான் நடிப்பை தொடரட்டுமா என்று கணவரிடம் கேட்க அவரும் பச்சைக் கொடி காட்டியுள்ளார். ஆனால் நடிகரின் அப்பா மார்க்கண்டேயரோ நான் இருக்கும் வரை மீண்டும் நடிக்க போகக் கூடாது, அதன் பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கறாராகக் கூறிவிட்டாராம். இந்நிலையில் நடிகரின் மனைவி மீண்டும் நடிக்க வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை பார்த்த மாமனார் கடுப்பாகி இது என்ன என்று கேட்க, அய்யோ நாங்கள் யாரிடமும் அப்படி கூறவில்லை. பிறகு இந்த செய்திகள் எப்படி வெளிவருகின்றன என்று தெரியவில்லை என நடிகரும், அவரது மனைவியும் தெரிவித்தார்களாம். திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று கூறி தானே உங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தேன். இப்போது மீண்டும் நடிப்பேன் என்றால் என்ன செய்வது என்று மாமனார் கோபத்தில் கொந்தளிக்கிறாராம்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக