திங்கள், 12 மே, 2014

மம்தாவும் வாரிசு அரசியலில் இறங்குகிறார் !இனி அபிஷேக்தான் அவரின் வியாதி

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
தலைவருமான மம்தா பானர்ஜி தனது உறவினர் மகன் அபிஷேக் பானர்ஜியை இம்முறை முதல் முறையாக தேர்தலில் களமிறங்கியுள்ளார்.  திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் அமைப்பின் தேசிய தலைவராக உள்ள அபிஷேக்கை தேர்தலில் போட்டியிட வைத்திருப்பதன் மூலம், மம்தா பானர்ஜி தனது அரசியல் வாரிசாக அபிஷேக்கை கருதியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், கட்சியிலும் அபிஷேக்குக்கு முழு ஆதரவு கிடைத்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள், வைர துறைமுக தொகுதியில் அபிஷேக் வெற்றிக்காக தனி கவனம் செலுத்தி வருகின்றனர். மக்கள் மத்தியிலும் குறிப்பாக பெண்கள் மத்தியலும் அபிஷேக் ஆதரவு பெற்றுள்ளார். சுத்தமானவர் கொள்கைவாதி எதிலும் விட்டுகொடுக்காத போராளி என்றெல்லாம் பேர் பெற்ற மம்தாஜி கடைசில வாரிசு சகதியில் விழுந்து விட்டாரே ?
மம்தாவும் அபிஷேக்கை முன்னிலைப்படுத்தி பேசுகிறார். பிரசாரங்களில் மம்தா பேசுகையில், ‘1990ல் மார்க்சிஸ்ட் கட்சியினர் என்னை தாக்கினர். அப்போது அபிஷேக் சிறுவனாக இருந்தான். அப்போது அவன், ‘நானும் வளர்ந்த உடன் அரசியலில் சேர்கிறேன். என் அத்தையை அடித்தார்களுக்கு பதிலடி தருவேன்’ என்றான்’ என புகழ்கிறார்.

ஆனாலும், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு மேற்கு வங்கத்தில் ஒட்டுமொத்தமாக திரிணாமுல் காங்கிரசின் வெற்றியை பாதிக்கும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இதில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாலும், சாரதா நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதாலும், மம்தாவின் கட்சியோடு அவரது அரசியல் வாரிசின் கனவும் நனவாக வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக