திங்கள், 12 மே, 2014

ஆம் ஆத்மி 3ஆவது அணிக்கு பிரச்னை அடிப்படையில் ஆதரவு !

"மத்தியில் மதச்சார்பற்ற அணி ஆட்சி அமைப்பதற்காக, பிரச்னை அடிப்படையில் மூன்றாவது அணிக்கு ஆதரவு தர தயார்' என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கோபால் ராய், ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காக, மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள், கடந்த 2 வாரங்களாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, மதச்சார்பற்ற மூன்றாவது அணி அமைக்கப்பட்டால், அந்த அணிக்கு பிரச்னைகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்கும்.
ஏனெனில், சாமானிய மக்களுக்காக தொடங்கப்பட்டது எங்கள் கட்சி. எனவே, பிரச்னைகளின் அடிப்படையில் மட்டுமே நாங்கள் ஆதரவளிப்போம். இது குறித்து தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முடிவு செய்வோம் என்று கோபால் ராய் கூறினார். மக்களவைத் தேர்தலில் 422 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..dinamani.com மூன்றாவது அணியில் பிரதமர் கனவில்  இதுவரை சுமார்  முப்பது பேர் உள்ளார்களே? அதில் யாருக்கு ஆதரவு என்று தீர்மானிப்பதில் உங்க கட்சி உடையபோவுது சார் ஜாக்கிரதை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக