வியாழன், 8 மே, 2014

முல்லைப் பெரியாறு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு- கேரளா

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இத்தீர்ப்புக்கு தமிழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது
ஆனால் கேரளாவில் தீர்ப்புக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து கேரள நீர்வளத் துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் கூறியதாவது: உச்சநீதிமன்றம், கேரள மக்களின் பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்ய உள்ளோம். மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வதற்கு குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். இவ்வாறு பி.ஜே. ஜோசப் தெரிவித்துள்ளார். அமைச்சரவை ஆலோசனை- முதல்வர் உம்மன் சாண்டி இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி, அணையைச் சுற்றி வாழும் பகுதி மக்களின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் பரிசிலீக்காதது துரதிருஷ்டவசமானது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்றார். /tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக