புதுடில்லி: கடந்த ஒன்றரை மாத காலமாக நடந்து முடிந்த தேர்தல் இறுதி
முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நாடு
முழுவதும் காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே நாடு
முழுவதும் 190 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ.,
கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காங்., 65 தொகுதிகளில் முன்னிலை
வகிக்கிறது. ஏனையகட்சிகள் 90 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து
வருகிறது. அ.தி.மு.க, 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.காங்., துணை
தலைவர் ராகுல் கூட பா.ஜ., வேட்பாளரை விட குறைந்த ஓட்டுக்கள் பெற்று
முன்னும், பின்னுமாக இருந்து வருகிறார்.
ஓட்டு எண்ணும் மையங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மத்திய ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
< முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணி துவங்கி நடந்து வருகிறது. முதல் கட்ட முன்னணி நிலவரம் காலை 9 மணி முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 543 தொகுதிகளில் ,உத்திரபிரதேசம்-80, பீகார்- 40, அசாம்- 14, சட்டீஸ்கர்- 11, டில்லி-7, குஜராத்-26, அரியானா-10, ஜார்கண்ட்-14, கர்நாடகா-28, கேரளா-20, மத்தியபிரதேசம்-29, மகாராஷட்டிரா-48, ஒடிசா-23, பஞ்சாப்-13,ராஜஸ்தான்- 25, சீமந்திரா-25, தெலுங்கானா- 17, தமிழ்நாடு-39, புதுச்சேரி-1, மேற்குவங்கம்-42, மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியன அடங்கும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக