திங்கள், 12 மே, 2014

உலக பொருளாதாரத்தில் ஜப்பானை பின் தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்தது இந்தியா!

india-displacesகொள்முதல் திறன் இணை என்னும் purchasing power parity-யின் அடிப்படையில்  அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது குறித்த ஆய்வு அறிக்கையை உலக வங்கி இன்று (30) வெளியிட்டது. இதில் இந்தியாவின் சிறப்பான வர்த்தக செயற்பாடுகளினால் உலகில் மிகப்பெரிய பொருளாதார நாடாகக் கருதப்படும் ஜப்பான் நாட்டை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளதாக இவ்வறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை 2011ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் வௌியிடப்பட்டுள்ளது.
கொள்முதல் திறன் இணை விகிதத்திலும் அமெரிக்கா முதன்மை நாடாக விளங்குகிறது, ஆனால் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் சீனா முதல் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான பொருளாதார நிலையிலும் இந்தியா சிறப்பாக செயற்பட்டதன் விளைவாக மூன்றாம் இடத்திற்கு உயர்ந்துள்ளது.
மேலும், இந்த அறிக்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் யாவும் பொருளாதார ரீதியில் உயர்ந்ததாக இல்லை.
அதே போல் நடுத்தர நாடுகளின் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2005ஆம் ஆண்டு இந்தப் பட்டியலில் இந்தியா 10 ஆவது இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.salasalappu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக