திங்கள், 12 மே, 2014

பாலாவுக்காக 10 கிலோ குறைத்தார் வரலட்சுமி

போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். இப்படத்தையடுத்து விஷாலுடன் ‘மதகஜ ராஜா படத்தில் நடித்தார். அப்படம் இன்னும் திரைக்கு வராமல் பென்டிங்கில் உள்ளது. இதற்கிடையில் சுதீப் ஜோடியாக ‘மாணிக்யா‘ என்ற கன்னட படத்தில் நடித்தார். தற்போது பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை படத்தில் நடிக்கிறார். நடனத்தில் ஸ்பெஷலிஸ்ட் என்ற வகையில் முதலில் இந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சென்றது. பின்னர் அது வரலட்சுமிக்கு மாறியது. இவரும் நடனம் கற்றுத்தேர்ந்தவர். அவரிடம் கரகாட்டத்துக்கு பயிற்சி பெற வேண்டும் என்று கண்டிஷன் போட்ட பாலா, ‘அடுத்தமுறை பார்க்கும்போது உடல் எடையும் குறைத்து ஸ்லிம்மாக இருக்க வேண்டும்‘ என்றார்.
பாலா படத்தில் வாய்ப்பு என்பது ஹீரோயின்களுக்கு குதிரைகொம்பு என்பதால், ‘ஒன்றிரண்டு மாதத்திலேயே ஸ்லிம் ஆகிக்காட்டுகிறேன்‘ என்றார் வரலட்சுமி. ‘பார்க்கலாம்‘ என்று பாலா கூறியதும் வரலட்சுமி ஒல்லியாவதற்கான பயிற்சியில் கவனம் செலுத்த தொடங்கினார். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என கடுமையான பயிற்சி மூலம் 10 கிலோ எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறி விட்டார். கரகாட்டகாரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. - tamilmurasu.org 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக