புதன், 14 மே, 2014

ரெய்மா சென் அதிர்ச்சி ! பலாத்கார காட்சியில் காயம் அடைந்த வில்லன்

வங்காள தேசம் சுதந்திரம் அடைந்ததை அடிப்படையாக கொண்டு
எடுக்கப்படும் படம் சில்ரன் ஆப் வார் (Children Of War) இந்த் அபடத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரத்தை எவ்வாறு தங்களது ஆயுதமாக பயன்படுத்தினர் என காட்சிகள் அமைக்கபட்டு உள்ளது.  இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பை ஸ்டூடியோவில் நடந்தது. காட்சிப்படி வில்லனாக நடிக்கும் திலோத்தமா, ரெய்மாசென்னை பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக படத்தின் இயக்குனர் மிருதுனியா தேவார்த் பலவிதமான ஷாட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் இந்த பலாத்கார காட்சி எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக திலோத்தமாவுக்கு காயம் ஏற்பட்டது.
பலாத்கார காட்சியின் போது ரெய்மா சென் வேகமாக திலோத்தமாவை தள்ளிவிட்டதால், அவர் கட்டிலின் கைப்பிடியின் மேல் அவருடைய தலைபட்டு ரத்தம் வழிந்தது. பின்னர் அவருக்கு முதலுதவி
செய்யப்பட்டது. அதன்பின்னர் படப்பிடிப்பு மீண்டும் நடைபெற்றது. தன்னால்தான் வில்லன் நடிகருக்கு காயம் ஏற்பட்டது என்பதை அறிந்த நடிகை ரெய்மா சென் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து படப்பிடிப்பு முடிந்ததும் திலோத்தமா கூறியதாவது, "பாலியல் பலாத்கார காட்சியில் நடிப்பது எவ்வளவு கடினமான வேலை என்பது நடிப்பவர்களுக்குத்தான் தெரியும்" என்றார். இந்த காட்சியின்போது நடிகை ரெய்மா சென்னுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்குனர் கூறும் போது இந்த காட்சியை பார்க்கும் அனைவருக்கும் ஒருவித நடுக்கம் இருக்கும். பாலியல் பலாத்கார காட்சியை பொழுதுபோக்காக நினைத்து பார்ப்பவர்கள் இனி அவ்வாறு  செய்ய வெட்கப்படுவார்கள். என கூறினார். dailythanthi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக