புதன், 14 மே, 2014

உலகின் மிக ஆடம்பரமான வீடாக முகேஷ் அம்பானியின் வீடு தேர்வு


உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் வீடுகளிலேயே மிகவும் ஆடம்பரமான வீடாக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டை ஃபோபர்ஸ் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்பையில் 4 லட்சம் சதுர அடியில் 27 மாடிகளைக் கொண்ட முகேஷ் அம்பானியின் "அன்டிலியா' வீடு தான் உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் வீடுகளிலேயே மிகவும் ஆடம்பர வீடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீட்டிற்கான கட்டுமானச் செலவு ரூ. 100 கோடியில் இருந்து ரூ. 200 கோடி வரை செலவிடப்பட்டிருக்கும். மேலும் இந்த வீட்டில் தரைத் தளத்தில் 6 அடுக்குகளைக் கொண்ட வாகன நிறுத்துமிடம் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் நிறுத்துமிடம் ஆகியவை உள்ளன. இந்த வீட்டை பராமரிப்பதற்கு 600 ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள் என்று ஃபோபரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

நியூயார்க் நகரின் மான்ஹாட்டனில் ரூ. 200 கோடி மதிப்பில் 17 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட 7வது உலக வர்த்தக மையக் கட்டடத்துடன், முகேஷ் அம்பானியின் வீட்டை ஃபோபர்ஸ் பத்திரிகை ஒப்பிட்டுள்ளது.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக