'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று, பெருமை பேசுகிறோம்.ஆனால்,
கல்வியில் தமிழின் இன்றைய நிலை என்ன? உண்மை கசக்கத்தான் செய்கிறது
என்றாலும் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.சில கேள்விகளை, தமிழ் துறை
பேராசிரியர்களிடம் வைத்தோம்.அவர்கள் தந்த பதில்கள்...
முனைவர் மகாலிங்கம், தமிழ் துறை தலைவர், மாநில கல்லூரி:
தமிழ், பிரபஞ்சம் போன்றது. தொன்மையானது; விசாலமானது; வித்தியாசங்களையும், விழுமியங்களையும் உள்ளடக்கியது.நாங்கள், இளைஞர்களாய் இருந்தபோது, அந்த பிரபஞ்சத்தை காண ஆவலோடு வந்தோம்.அப்போது, சென்னை பச்சையப்பன் கல்லுாரி, மாநில கல்லுாரி, ராணி மேரி கல்லுாரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை போன்ற, ஒரு சில புகலிடங்களே எங்களை வரவேற்றன.இன்று, அப்படி அல்ல. நிறைய கல்லுாரிகளில், தமிழ் துறையும் திறந்து கிடக்கிறது.மாணவர்களில் பலர், பிற வழி இல்லாததால் இங்கு வருகின்றனர்; மொழியை தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடும் நாடுகள் உருப்படவேயில்லை. ( பிரான்சு, நம்மூர், பர்மா, என ) ஆனால், அதன் போக்கில் வளர விடும் ஆங்கிலம், இந்தி, ஜெர்மனி இவை கம்யூனிகேஷனில் மிக முன்னேறியுள்ளன. வியாபாரம், மற்றும் தொழிலும். நம்மூரோ டெக்னிகல் வார்த்தைகளை கூட தூய்ஸ் த்ச்மிழ் ஆக்கி, கிணற்றுத் தவளைகளில் பெருமிதம் அடைகின்றன.
சிலர், இந்த வழிதான் இருக்கிறது என்பதற்காக வருகின்றனர்; மிகச் சிலரே இந்த வழியை தேடி கண்டுபிடித்து, உள்ளே நுழைகின்றனர்.உள்ளே நுழையும் எல்லோரையுமே, உலகம் ஒரு முறையேனும், இயல்பாகவே எள்ளி நகையாடுகிறது.இன்றைய சூழலில், தமிழ் என்பது, உடைந்த மனங்களுக்கு ஒட்டு போடும் கோந்து மட்டுமே.தமிழ், வாழ்க்கைக் கடலுக்கு, படகல்ல; துடுப்பு! பிற மொழி அறிவு; கணினி அறிவு; உலக நடப்புகளில் ஈடுபாடு உள்ளிட்ட, உலக உருண்டையின் கூறுகளை திரட்டி, நாம்தான் படகு தயாரித்து கொள்ள வேண்டும்.இந்த திறன் படைத்தவர்களுக்கு, ஊடக துறை, பதிப்பு துறை, செய்தி துறை, வரலாறு, பண்பாட்டு துறை, அறநிலைய துறை, போட்டி தேர்வுகள் ஆகியவற்றில் வரவேற்பு இருக்கின்றது.ஒப்பிலா மதிவாணன், இணை பேராசிரியர், தொலைநிலை கல்வி, சென்னை பல்கலை:மொழி என்பது அறிவல்ல; அது ஒரு தொடர்பியல் ஊடகம்.தற்கால அறிவியலை, தமிழுக்குள் புகுத்த வேண்டும். இந்த ஆண்டு முதலே, தமிழகத்தில், தகுதியான, தமிழறிஞர்களுக்கு பஞ்சம் துவங்கி விட்டது.அதற்கான தகுதியை அடைய, பாடத்திட்டங்களில் மாற்றம் வேண்டும்.தற்கால ஊடகங்களைப் பற்றியும், அவற்றில் உள்ள வாய்ப்புகளுக்கு தயார்படுத்தி கொள்வது பற்றியும் பாடத்திட்டங்கள் இருக்க வேணடும்.அடிப்படை கல்வியில், பழைய 'அ, ஆ, இ, ஈ' எனும், நெடுங்கோட்டு முறை, மீண்டும் வரவேண்டும்.தற்போதுள்ள, 'ட, ப, ம' எனும், நேர்கோட்டு முறை தவறு. இப்படி நிறைய மாற்றங்களை, தமிழ் பாடத் திட்டமும், தமிழ் மாணவர்களும் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.ஆய்வியல் மாணவர்கள், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், சுற்றுச்சூழலையும் பற்றி ஆராய வேண்டும்.
முனைவர். அகமது மரைக்காயர், புது கல்லுாரி:எங்கள் கல்லுாரியில், முதுகலை தமிழ் இலக்கியம் மட்டுமே இருக்கிறது. 24 மாணவர்கள் படிக்கக் கூடிய வகுப்பில், பத்துக்கும் குறைவான மாணவர்களே வருகின்றனர்.அவர்களிலும், ஆர்வத்தோடு தமிழ் இலக்கண, இலக்கியங்களை படிப்பவர்கள் குறைவு.தமிழை பிழையின்றி பேச, எழுத, கற்பிக்க தெரிந்தாலே, ஒரு தமிழ் மாணவன் வெற்றி பெற்று விடுவான்.தேர்வுக்கு மட்டும் படிக்காமல், வாழ்க்கைக்காக படிக்க வேண்டும். படிக்கும் காலத்திலேயே, போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டும். தமிழ் ஊடகங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். பல எழுத்தாளர்களின் நுால்களை வாசிக்க வேண்டும். பின், அவற்றின் கருத்துக்களை பற்றி யோசிக்க வேண்டும். விவாதிக்கவும், விமர்சிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
பேரா., சூ.அந்தோணிசாமி செல்வநாதன், துறை தலைவர், லயோலா கல்லூரி:இன்று, விருப்பமில்லாமல் தமிழ் படிக்கும் கூட்டத்தை விட, விரும்பியும் தமிழ் படிக்க முடியாத கூட்டம் வெளிநாட்டிலும், தமிழ் துறைக்கு வெளியிலும் இருக்கிறது.அவர்களுக்கு, விருப்பத்தோடு, தமிழ் கற்றுக் கொடுத்தாலே தமிழ் நிலைக்கும்.யாரும், அவநம்பிக்கையோடு, தமிழ் படிக்க வரக்கூடாது. தமிழ் படிப்பவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். தமிழ் படிக்க வரும் மாணவர்கள், அகராதியை பயன்படுத்தி சொற்களுக்கு சரியான பொருளை அறிந்துகொள்ள வேண்டும். முதலில் தமிழ் தட்டச்சு கற்கவேண்டும்.கணினி அறிவு, இணைய அறிவு தேவை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள ஒரு பல்கலையை சேர்ந்த, பெயர் வெளியிட விரும்பாத இணை பேராசிரியர் ஒருவர், உண்மை நிலவரத்தை இவ்வாறு கூறினார்:பொதுவாக தமிழ் படிப்போர், பிற மொழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என, 1930,40களில் நினைத்தனர். பிற மொழிகளை எதிரிகளாக பார்க்கவில்லை.அதனால் தான், அந்த காலகட்டத்தைய தமிழ் அறிஞர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி அல்லது வேறு ஏதாவது ஒரு மொழி என, நான்கு மொழிகளாவது தெரிந்திருக்கும்.ஆனால், 1940க்கு பின் முளைத்த திராவிட இயக்கம், மொழி உணர்வு என்ற பெயரில், தமிழையும் கட்டாய பாடமாக ஆக்காமல், மற்ற மொழிகளையும் கற்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தாமல், மற்ற மொழிகளை எதிரியாக பார்க்க கற்பித்து, தமிழை வீழ்த்தியது.அன்று துவங்கிய வீழ்ச்சி இன்றும் தொடர்கிறது. இதை வெளிப்படையாக சொன்னால், எங்களுக்கு வேலை இருக்காது. இவ்வாறு கவலையுடன் தெரிவித்தார்.
-- நமது நிருபர்- - dinamalar.com

// மொழியை தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடும் நாடுகள் உருப்படவேயில்லை. ( பிரான்சு, நம்மூர், பர்மா, என ) ஆனால், அதன் போக்கில் வளர விடும் ஆங்கிலம், இந்தி, ஜெர்மனி இவை கம்யூனிகேஷனில் மிக முன்னேறியுள்ளன. வியாபாரம், மற்றும் தொழிலும். நம்மூரோ டெக்னிகல் வார்த்தைகளை கூட தூய்ஸ் த்ச்மிழ் ஆக்கி, கிணற்றுத் தவளைகளில் பெருமிதம் அடைகின்றன. //
பதிலளிநீக்குமொழி பற்றுக்கு தலையில் தூக்கி வைத்துகொண்டு ஆடுவது என்ற வார்த்தை பொருந்தாதது.உண்மையில் உங்களை போல பலரும் மொழி என்ற பார்வையில் மற்ற மொழிகளுக்கு அடிமையாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எளிமையாக சொல்லபோனால் "இங்கிலீஷ் எவ்வளவு பெரிய மொழி அதுகிட்டபோய் நம்ம தமிழ் வாலாட்ட முடியுமா?" என்பதுபோல. தாய் மொழியில் படித்தால் தான் உண்மையான சிந்திக்கும் திறன் கிடைக்கும் என அதே இங்கிலிஷ்காரன் சொன்னாலும் காதில் வாங்கிகொல்லாமாடீர்கள். தங்களின் தாய்மொழியில் படிக்கும் பல நாடுகள் நல்லா தான் உருபுட்டு இருக்கு நண்பரே.உங்களைபோல் ஹிந்தி மொழிக்காரன் அடிமை உணர்வு கொண்டிருந்தால் இன்று தன் மொழியை இந்தியா முழுதும் பரப்ப முயன்றிருக்க மாட்டான்?. அவனும் சாதாரண மனிதன் தானே? அவனுக்கு இருக்கும் தீ உங்களை போன்றவர்களுக்கு துளியும் இல்லையே. நாம் தானே நம் மொழியை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லவேண்டும். சொந்த மொழிக்கு என்ன குறைகளோ அதை சொன்னால் கூட பரவாயில்லை, ஆனால் நம் மொழியையே நாமே கேவலமாக பேசுவது உங்களை நீங்களே கேவலமாக பேசுவதற்கு சமம்.
தமிழின் இந்த மோசமான நிலைக்கு காரணம்... மொழிபற்றே இல்லாத திராவிட கட்சிகள் தான். இது 100% சரி. தமிழ் டெக்னிகல் வோர்ட் இல்லை என்று சொல்வது சரிதான். சொல்லே இல்லாமல் எவ்வாறு ஒரு தகவலை நம் மொழியில் சொல்லமுடியும். அப்படியே உருவாக்கி வைத்தாலும் எந்த பத்திரிக்கைகள் பயன்படுத்துகின்றனர். இருக்கும் தமிழா சொற்களை கூட பயன்படுத்தாமல் ஆங்கில வார்த்தைகளை தானே பயன்படுத்துகின்றனர்.பணம் தானே குறிக்கோள் இவர்களுக்கு.
தமிழை அழிப்பது இரண்டு ஒன்று திராவிடம் ... மற்றொண்டு ஊடகம்.