தனது தம்பி சத்யாவை ஹீரோவாக வைத்து, நடிகர் ஆர்யா
தயாரித்து வரும்
படம் தான் 'அமரகாவியம்'. ‘நான்’ என்ற த்ரில்லர் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இந்த காதல் கதையை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் என்ற முறையில் ஆர்யாவும் அவருடைய ஓரிரு நண்பர்களும் படம் பார்த்தனர். காட்சி முடிந்தவுடன் ஆர்யாவின் கண்களில் கண்ணீர் துளிகள் தென்பட ஈரமான கண்களுடன் யாரிடமும் பேசாமல் அவர் திரையரங்கை விட்டு வெளியேறினார். எதையும் மறைத்து பேசி பழக தெரியாதவர் என்ற அறியப்படும் ஆர்யா, கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்தின் படப்பிடிப்புக்கு சென்றார்.
என்ன நினைத்தாரோ என்னவோ, சட்டென தனது உதவியாளரை அழைத்து 143 cake வாங்கி வர சொன்னார். கேக் வந்தவுடன் தனது பட குழுவினருக்கு கொடுத்து மகிழ்ந்தார். அது என்ன 143 கேக் என்ற கேள்விக்கு '143 என்கிற எண் காதலுக்கு மிக முக்கியமான எண் என விளக்கம் கொடுத்தார்.
I Love you என்ற அந்த மூன்று முக்கிய வார்த்தைகளின் இன்னொரு வடிவம் தான் 143. படம் பார்த்த வினாடியே பரவசத்தில் எனக்கு தோன்றிய முதல் செய்கைதான் இது என்றார்.
படத்தை பற்றி ஆர்யா மேலும் கூறும்போது, “இயக்குனர் ஜீவா ஷங்கர் இதற்கு முன்னர் 'நான்' திரைப்படத்தை இயக்கியவர் தவிர என் நெருங்கிய நண்பரும் ஆவார். நாயகன் சத்யா என் தம்பி. நாயகி மியா ஜார்ஜ் - சத்யா ஜோடி, ஒரு இனிமையான காதல் கதையை நம் கண் முன் நிறுத்தப்போவது நிஜம்.
ஒரு நடிகனாக நான் சினிமாவில் பல படங்களை பார்த்து இருக்கிறேன், அந்த மன நிலையே வேறு. ஆனால் முதல் முறையாக ஒரு தாயாரிப்பாளர் என்ற முறையில் 'அமர காவியம்' பார்த்து எனக்கு கிடைத்த பிரமிப்பும், பெருமிதமும் சொல்லில் அடங்காதவை. இந்த உணர்வு என்னை மேலும் தரமான படங்களை தர வேண்டும் என சொல்ல வைக்கிறது" என்றார். dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக