சனி, 12 ஏப்ரல், 2014

Y.G.மகேந்திரா: M.S.விஸ்வநாதனைத் தவிர வேறு யாரையும் இசையமைப்பாளராக கருதவில்லை:


"உலக சமாதானத்துக்காக இசையமைத்த 229 பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது. அதற்கான சான்றிதழை பொங்கும் இசைக் குழுவின் நிறுவனர் எம்.எஸ்.மார்ட்டினிடம் வழங்குகிறார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். உடன் (இடமிருந்து) சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைச் செயலர் தனவேல், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா." உலக சமாதானத்துக்காக இசையமைத்த 229 பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது. அதற்கான சான்றிதழை பொங்கும் இசைக் குழுவின் நிறுவனர் எம்.எஸ்.மார்ட்டினிடம் வழங்குகிறார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். உடன் (இடமிருந்து) சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைச் செயலர் தனவேல், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா. எம்.எஸ்.விஸ்வநாதனைத் தவிர வேறு யாரையும் என்னால் இசையமைப்பாளராகக் கருத முடியவில்லை என நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தெரிவித்தார்.

பொங்கும் இசை என்ற குழுவின் நிறுவனர் எம்.எஸ்.மார்ட்டின் தலைமையில் உலக அமைதிக்காக 229 பள்ளி மாணவர்கள், தொடர்ந்து இரண்டு மணி நேரம் கீ போர்டு வாசிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதற்காக சென்னையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 229 பேர் தேர்வு செய்யப்பட்டு இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆறு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த முயற்சி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது.
அதற்கான பாராட்டு விழா சென்னை மியூசிக் அகாதெமியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒய்.ஜி.மகேந்திரா பேசியது: இசையுடனான எனது அனுபவம் என்னைப் பொருத்தவரை எம்.எஸ்.விஸ்வநாதனில் தொடங்கி எம்.எஸ்.விஸ்நாதனுடனேயே முடிந்துவிட்டது. அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் இசையமைப்பாளராக கருத முடியவில்லை. இன்றைய வளரும் தலைமுறை எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டுமானால் தினமும் எஸ்.எஸ்.விஸ்வநாதனின் ஒரு பாடலையாவது கீபோர்டில் வாசித்துப் பழகுங்கள் என்றார் அவர். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பேசுகையில் ரசிகர்களின் அனுக்கிரகத்தினாலும், ஆண்டவனின் அனுக்கிரகத்தினாலும் ஆயுளோடு வாழ்ந்து வருகிறேன். மாணவர்கள் நல்ல சங்கீதத்தைக் கற்று நீடூழி வாழ்க என்றார் அவர். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக