முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் விரைவில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக-வில் இணைகிறார்.
இதுகுறித்து செஞ்சி ராமச்சந்திரன் ’தி இந்து’விடம் கூறியதாவது: அதிமுக
தரப்பிலிருந்து என்னோடு பேச்சு வார்த்தை நடத்தியது உண்மை. திமுக-வில்
குடும்ப ஆதிக்கமும் கொள்கை முரண்பாடுகளும் அதி கரித்துவிட்டதாகச்
சொல்லித்தான் வைகோ-வுடன் சென்றோம். ஆனால், அங்கேயும் முடிவுகளை திணிக்கும்
தனி நபர் ஆதிக்கம் அதிகரித்தது. அதனால்தான் மீண்டும் திமுக-வில் இணைந்தோம்.
திமுக-வில் இப்போது குடும்ப ஆதிக்கத்துடன் பண ஆதிக்கமும்
அதிகரித்துவிட்டது. நான் திமுக-வில் நீடிக்க முடியாத அளவுக்கு அங்குள்ள சில
தனிநபர்கள் எனக்கு நெருக்கடி தருகின்றனர். இம்முறை திமுக-வில் வேட்பாளர்
தேர்வு முறையே தவறாக நடந்திருக்கிறது. ஒருமுறை தப்புச் செய்யலாம் ஆனால்,
திமுக-வில் உள்ள சிலர் தப்பு செய்வதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்.
இந்த முறை எனக்கு சீட் கொடுக்க கனிமொழி சிபாரிசு செய்தார். அதற்காக
அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். ஆனால், எனக்கு சீட் கொடுக்கச் சொல்லி
கனிமொழி சிபாரிசு செய்ததே தவறு என்கிறேன்.
நான் யார் என்று கட்சித் தலை மைக்கு தெரியாதா?
எனக்கும்
பழனிமாணிக்கத்துக்கும் டி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் எப்படியாவது சீட்
கொடுத்துவிட வேண்டும் என்று கருணாநிதி நினைத்தார். ஆனால், அவர் நினைத்தது
எதுவும் நடக்கவில்லை. போனால் போகிறதென்று இளங் கோவனுக்கு மட்டும் சீட்
கொடுத் திருக்கிறார்கள். திமுக இப் போது “ஒன்மேன் ஆர்மி” ஆகிவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிமுக-வில் இணைய முடிவெடுத்து விட்டீர்களா? என்று அவரை கேட்ட தற்கு,
“அழைப்பு வந்திருக்கிறது. எனது ஆதரவாளர்களை அழைத்துப் பேசி முடிவெடுக்கலாம்
என்றிருக்கிறேன்’’ என்றார்.
திமுக தலைமையிலிருந்து தன்னை சமாதானப்படுத்துவார்கள் என்று எதிர்
பார்த்தாராம் செஞ்சி ராமச்சந்திரன். இதுவரை திமுக தரப்பிலிருந்து யாரும்
அவரைத் தொடர்பு கொள்ளாததால் செஞ்சியார் அதிமுக-வில் ஐக்கிய மாவது உறுதி
என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக