சனி, 12 ஏப்ரல், 2014

Jeya: மின் வெட்டுக்கு சதித் திட்டமே காரணம் ! நடிகைகளிலும் எத்தனையோ நாணயமான தரமிக்க நடிகைகள் உண்டு. இது ருசி கண்ட பூனை.

சென்னை : தமிழகத்தில், அதிகரித்து வரும் மின் வெட்டால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இது, லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மின்வெட்டுக்கான காரணம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா, தினம் ஒரு விளக்கம் அளித்து வருகிறார். மக்களிடம் ஏற்பட்டு உள்ள அதிருப்தியை நீக்க, நேற்று, திருநெல்வேலியில் பேசும்போது, ''மின் வெட்டுக்கு சதித் திட்டமே காரணம். இச்சதியில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்போம்,'' என, சூளுரைத்துள்ளார்.  மம்மிஜி தமிழகத்தின் மின்சார பிரச்சினை தீர்வதற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்பது தான் உண்மை. மம்மிஜி 'என் பகீரத முயற்சி' என்று வாய் கூசாமல் தம்பட்டம் அடிப்பது தி.மு.க ஆட்சியில் செய்ய பட்ட முயற்சிகள் மற்றும் செயல் திட்டங்களை தான். அதனால தான் சொல்றோம் மக்களே, தயவு செய்து இந்த தேர்தல்ல மம்மிஜியை அதிக அளவில் ஜெயிக்க வச்சுடாதீங்க.. அப்படி வச்சீங்கன்னா மம்மிஜி தலை கால் புரியாம ஆடுவாங்க.. நாட்டை நாசம் பண்ணுவாங்க

தமிழகத்தில், கடந்த நவம்பரில், வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையத்தின், முதல் அலகில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
>மீண்டும் மின் தடை நெய்வேலி அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம் உள்ளிட்ட மத்திய மின் தொகுப்பில், பராமரிப்பு பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், தமிழகத்தில், பல மாதங்களுக்கு பிறகு, மின் தடை மீண்டும் அமலுக்கு வந்தது.தமிழகத்தை மத்திய அரசு பழிவாங்குவதாக குற்றஞ்சாட்டி, நவ., 25ம் தேதி, பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதினார்.இதன் பிறகு, லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவக்கியபோது, 'மின் உற்பத்தியை எடுத்துக் கொண்டால், என் அரசின் பகீரத முயற்சியால், 2,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கிறது. வெளி மாநிலங்களில் இருந்து, 500 மெகாவாட், மின்சாரம் வாங்கப்படுகிறது. 'இது தவிர, 3,300 மெகாவாட் மின்சாரம், நீண்ட கால அடிப்படையில் வாங்கப்படும். விரைவில், மின்வெட்டு இல்லாத மாநிலமாக, தமிழகம் திகழும்' என, பேசினார்.இதே கருத்தை வலியுறுத்தி, பல கூட்டங்களில் பேசினார். ஆனால், அவர் பேசியதற்கு மாறாக, மின் உற்பத்தி பாதிப்பால், ஆறு முதல், எட்டு மணி நேரம், மின் தடை செய்யப்பட்டது.இது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது, முதல்வரின் கவனத்திற்கு, கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கடந்த, 3ம் தேதி, சேலம் மற்றும் நாமக்கல், தேர்தல் பிரசார கூட்டத்தில், முதல்வர், தன் பேச்சில் மாற்றம் செய்தார்.அவர் பேசும்போது, 'இருண்ட தமிழகம், ஒளி பெற தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று, வாக்குறுதி அளித்து இருந்தோம். இது, ஓரளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. 'புதிதாக துவக்கப்பட்டு உள்ள, மின் நிலையங்களில், சில சமயங்களில், பாதிப்புகள் ஏற்படுவதால், சில நாட்களில் மின் தடை ஏற்படுகிறது. அவை அனைத்தும், உடனுக்குடன் சரி செய்யப்படுகின்றன. இதை தான், எதிர்க்கட்சிகள் ஊதி ஊதி பெரிதாக்குகின்றன' என்றார். 'மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும்' எனக் கூறுவதை தவிர்த்தார்.ஆனால், அதன்பிறகும்
முதல்வராக இருந்திருக்கிறேன். அப்போது, மின் வினியோகம் சீராக இருந்தது. உபரி மின்சாரம், பிற மாநிலங்களுக்கு விற்கப்பட்டது.ஆனால், 2006ல், தி.மு.க., ஆட்சியில், மின் நிலைமை மிகவும் மோசமடைந்தது. என் ஆட்சி காலத்தில் ஒப்பந்தங்கள் போடப்பட்ட, புதிய மின் திட்டங்களை, கருணாநிதி கிடப்பில் போட்டு விட்டார். அதனால், 2008க்கு பிறகு, மின் பற்றாக்குறை ஏற்பட்டது; தமிழகமே இருளில் மூழ்கியது.கடந்த 2008ல் இருந்து, 2011 வரை, ஒவ்வொரு ஆண்டும், மின் பற்றாக்குறை, அதிகரித்து வந்தது.கடந்த 2011ல், நான் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றபோது, ஒட்டுமொத்த மின் பற்றாக்குறை, 4,000 மெகாவாட்டாக இருந்தது. தி.மு.க., ஆட்சியில், சீராக நடந்து கொண்டிருந்த, மின் உற்பத்தி நிலையங்கள், வேண்டுமென்றே பராமரிப்பின்றி விடப்பட்டு, பழுதடையச் செய்து, அதன் மூலம், வெளி மாநிலங்களில் இருந்து, மின்சாரத்தை அதிகவிலை கொடுத்து வாங்கி, கமிஷன் சம்பாதிக்கலாம் என திட்டமிட்டு, இந்த மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், மின்சார வாரியத்திற்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தது.இந்த மோசமான மின் பற்றாக்குறை நிலைமையை சரி செய்தே தீருவேன் என, சபதம் செய்தேன். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். படிப்படியாக கடன்களை எல்லாம் அடைத்து வந்தோம்.புதிய மின் திட்டங்களை துவக்கினோம். வெளி மாநிலங்களில் இருந்து, மின்சாரத்தை வரவழைத்தோம். கடந்த ஆண்டு, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம், நிலைமை சீர் செய்யப்பட்டுவிட்டது. அப்போது மின்வெட்டே இருக்கவில்லை.கடந்த ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத் தொடரின்போது, இதை பெருமிதத்துடன் தெரிவித்தேன். அடுத்து சில நாட்களில், ஏற்காடு இடைத் தேர்தல் வந்தது. அப்போது சொல்லி வைத்தாற்போல், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, மின் நிலையங்கள், ஒன்றன் பின் ஒன்றாக பழுதடைந்தன.இதனால் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போதே, 'சதித் திட்டம் நடக்கிறது. வேண்டுமென்றே மின் உற்பத்தி நிலையங்களை, பழுதடைய செய்திருக்கின்றனர். நிலைமையை சரி செய்வோம்' என்றேன்.
அதன்பிறகு ஓரளவுக்கு நிலைமை சரி செய்யப்பட்டது. அதற்குள் லோக்சபா தேர்தல் வந்து விட்டது.இதை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று, மின் பற்றாக்குறை என்ற நிலைமை, தமிழகத்தில் இல்லை. மக்கள் தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது.அதற்கு மேல் தேவைப்பட்டால், வெளி மாநிலங்களில் இருந்து வாங்கிக் கொண்டு இருக்கிறோம். அப்படியானால் அடிக்கடி ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது?
திடீரென, இரண்டு மின் நிலையங்கள், ஒரு நாளில் பழுதடைந்து விடுகின்றன. இதனால், கிட்டத்தட்ட 1,000 முதல் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி குறைகிறது. அந்த நேரத்தில், தமிழகம் எங்கும், மின்வெட்டு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. போர்க்கால அடிப்படையில், பழுதடைந்த நிலையங்களை சரி செய்கிறோம். அதன்பின், இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும், மூன்று மின் உற்பத்தி நிலையங்கள், பழுதடைந்து விடுகின்றன. ஏதோ ஒரு காரணத்தை சொல்கின்றனர். 'டிரிப் ஆகி விட்டது; கன்வேயர் பெல்ட் அறுந்து விட்டது; திடீரென தீ விபத்து ஏற்பட்டு விட்டது' என, சொல்கின்றனர்.மீண்டும் அதை சரி செய்கிறோம். அதை சரி செய்த உடனே, மறுபடியும் வேறு ஏதேனும் ஒரு மின் நிலையத்தில், இப்படி பழுது ஏற்படுகிறது.நானும் யோசித்து பார்த்தேன். நான் ஏற்கனவே, இரண்டு முறை, முதல்வராக இருந்திருக்கிறேன். என்முந்தைய ஆட்சி காலங்களில், மின் உற்பத்தி நிலையங்கள், இப்படி தினமும் பழுதடையவில்லை. மின் உற்பத்தி நிலையங்களில், தினசரி பழுது ஏற்படாது; தவறும் ஏற்படாது.ஆகவே, திட்டமிட்ட சதி நடைபெறுகிறது என்று, இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். செயற்கையான மின் பற்றாக்குறையை ஏற்படுத்தி, வேண்டும் என்றே, மின் உற்பத்தி நிலையங்களில், இத்தகைய பழுதுகளை ஏற்படச் செய்து, அதன் காரணமாக, செயற்கையான மின் பற்றாக்குறையை ஏற்படுத்தி, மின்வெட்டு செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி, இதன் மூலம், அ.தி.மு.க., அரசு மீது, அதிருப்தி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இதை செய்கின்றனரோ என, அனைவரும் இப்போது சந்தேகப்பட ஆரம்பித்து விட்டனர். எங்கும் இதே பேச்சாக இருக்கிறது.

எனவே, ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தமிழகத்தில், மின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தினமும் இப்படி மின் உற்பத்தி நிலையங்களில், பழுது ஏற்படுகிறது என்றால், இது திட்டமிட்ட சதி தானோ என்று தோன்றுகிறது.எனவே, ஆராய்ந்து, விசாரித்து, பரிசீலித்து, இந்த சதி வேலைக்கு, நாச வேலைக்கு, யார் காரணம் என்பதை நிச்சயமாக, கண்டுபிடித்தே தீருவோம்.மக்களின் துன்பத்தை பற்றி கவலைப்படாமல், மின்வெட்டு என்ற துன்பத்தை மக்கள் சகித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், வேண்டும் என்றே, இப்படி நாச வேலையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்களை இனங்கண்டு, அவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; மின் நிலைமை சீர் செய்யப்படும்.இவ்வாறு, முதல்வர் பேசினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக