புதன், 9 ஏப்ரல், 2014

ஸ்டாலின் தலைமையை திமுக-வினர் ஏற்க மாட்டார்கள்: திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் பேட்டி


கட்சியினரை பாரபட்சமாக நடத்தும் ஸ்டாலின் தலைமையை திமுக வினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று திமுக எம்.பி.யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கூறியுள்ளார்.
திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ். | கோப்புப் படம். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி ஆதரவு எம்.பி.க்களான நீங்கள், நெப்போலியன் மற்றும் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் திமுகவில் இருக்கிறீர்களா அல்லது நீக்கப்பட்டு விட்டீர்களா?
திமுக-வில்தான் நாங்கள் இருக்கிறோம். திமுக-வில் நாங்கள் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை கட்சிதான் சொல்ல வேண்டும்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி யுடன் தொடர்பு வைத்திருக்கும் திமுக-வினர் மீதும் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படுமென்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லையா?
என்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். தகுந்த விளக்கம் கொடுத்து விட்டேன். நாங்கள் கட்சிக்கு தவறு செய்ய வில்லை. எனக்கு அழகிரி அண்ண னைப் பிடிக்கும். எனவே அவருடன் இருக்கிறேன். நான் மட்டுமல்ல கட்சிக்காக உழைத்த, கட்சித் தலைமை மீது மரியாதை கொண்ட திமுகவினர் பெரும்பாலும் அண்ண னுடன்தான் இருக்கிறோம்.
நாங்கள் தவறு செய்திருந்தால், எங்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கட்டும். அண்ணனை (அழகிரி) நீக்கி மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.

தலைமையுடன் நெருக்கமாக இருப்பவர்கள்தான் தவறு செய் துள்ளனர். தேர்தலில் அவர்கள் செய்த தவறுகளுக்கு நாங்கள் ஆதாரம் வைத்துள்ளோம்.
தலைமையுடன் என்னதான் பிரச்சினை? தேர்தல் பணிகளில் கூட உங்களைப் பார்க்க முடிய வில்லையே?
உள்கட்சித் தேர்தலை நடத்துவ தாகக் கூறிவிட்டு, ஸ்டாலின் யாரை சுட்டிக்காட்டினாரோ, அவர்களுக்கு மட்டுமே பதவி கொடுத்தார்கள். ராமநாதபுரத்தில் சுப.தங்க வேலனை மாவட்டப் பொறுப்புக்கு கொண்டு வந்தார்கள். ஸ்டாலின் தானாக கட்சி நிர்வாகிகளை நியமிக்க வேண்டுமென்றால், எதற்கு தேர்தல் நடத்த வேண்டும். முதலிலேயே நியமனம் செய் திருக்கலாமே. உண்மையான கட்சிக்காரர்கள் தமிழகம் முழுவதும் கோபத்துடன் உள்ளனர்.
தங்கவேலன் உங்கள் உறவினர், அவர் ஆதரவுடன்தானே திமுக வுக்கு வந்தீர்கள்?
என்னை கட்சிக்கு அழைத்து வந்தவர் ராமநாதபுரம் நகர செய லாளர் ஆர்.ஜி.ரத்தினம். அண்ணன் அழகிரியும், கனிமொழி அக்காவும் என்னை கட்சியில் வளர்ச்சிபெற வைத்தார்கள். தங்கவேலன் எனக்கு உறவுக்காரர்தான். அவ ருடன் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் எனக்கு இல்லை. ஆனால் தேர்தல் என்ற போர் வையில் அவரது ஆட்களுக்கு பதவி கொடுத்து, கட்சிக்கு உழைத்த வர்களை ஓரங்கட்டி விட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் 90 ஆயிரம் புதிய உறுப்பினர்களை முறையாக சேர்த்துள்ளேன். எனக்கு தான் ஆதரவு அதிகமுள்ளது. அவர் நியாயமாக என்னுடன் போட்டி போட்டு பார்க்கட்டும்.
அழகிரி, ஸ்டாலின் சகோதர யுத்தத்தால் தேர்தலில் திமுக-வின் வெற்றி பாதிக்கப்படுமா?
நிச்சயமாக பாதிக்கப்படும். வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி நடந்துள்ளது. அழகிரிக்கு தமிழ கம் முழுவதும் ஆதரவு உள்ளது. முதுகுளத்தூருக்கு அவர் அண் மையில் வந்திருந்தார். கட்சிக் காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி வரவேற்பு அளித்தனர். இந்த தகவல் கட்சித் தலைமைக்கும் தெரிந்திருக்கும்.
திமுக-வுக்கு ஸ்டாலின் தலைமை ஏற்றால் திமுக-வினர் ஏற்றுக்கொள்வார்களா?
ஸ்டாலின் தலைமையை நிச்சய மாக கட்சிக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உள்கட்சித் தேர்தல் நடத்தியதில் அவரது அணுகுமுறை சரியில்லை. ஒரு கட்சி யின் பொருளாளர், கட்சியில் இருக்கும் அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும். அவரே குறிப்பிட்ட ஆட்களை தனது ஆட்கள் என்று அணி சேர்த்தால், அவர் எப்படி தலைமைப் பொறுப்பில் அனைவரையும் அரவணைத்து செல்வார்?
கனிமொழியின் செயல்பாடுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
கனிமொழி அக்காவை மதிக்கிறேன். அவரும், அண்ணன் அழகிரியும்தான் கட்சிக்காக அதிகம் உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள், அதற்காக தளபதி உழைக்கவில்லை என்று சொல்லவில்லை.
கனிமொழி அக்காவுக்கும் கலைஞர் டிவிக்கும் எந்த சம்பந்த முமில்லை. ஆனால் தேவையில் லாமல் 2ஜி பழியை கட்சிக்காக சுமக்கிறார். அவரையும் சரியான உயர்ந்த நிலையில் கட்சித் தலைமை வைக்கவில்லை. தலை வரிடம் (கருணாநிதியிடம்) உள்ள பொறுமை அக்காவுக் கும் இருப்பதால், மிகுந்த பொறு மையுடன் கட்சி நடவடிக்கைகளை அனுசரித்து செல்கிறார்.
நடிகராக இருந்ததற்கும், அரசியல் வாதியாக இருப்பதற்கும் என்ன வித்தியாசம் தெரிகிறது?
நடிகராக இருந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தேன். அரசியல்வாதியானபோது அதிக துன்பமும், அதிக இன்பமும் பெற்றேன்.
சேது திட்டம், கச்சத்தீவு, மீனவர் பிரச்சினை மூன்றுமே உங்கள் ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்ததுதான், அதற்காக நாடாளு மன்றத்தில் குரல் கொடுத்தீர்களா?
சேது திட்டம் குறித்து நீதிமன்றத் தில் வழக்கு இருந்ததால் பேச வில்லை. மீனவர் பிரச்சினை, கச்சத் தீவு குறித்து பேசியிருக்கிறேன். என் கோரிக்கைகளை ஏன் நிறை வேற்றித் தரவில்லை என்று தற் போது காங்கிரஸார் வருத்தப்படு கின்றனர். அதனால் தற்போது கூட்டணியில்லாமல், திமுகவும், காங்கிரஸும் பிரிந்து நிற்கின்றன. இது இரண்டு கட்சிகளையுமே பாதிக்கும்.
இவ்வாறு ஜே.கே.ரித்தீஷ் கூறினார்.  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக