சனி, 26 ஏப்ரல், 2014

பார்வதி மேனன்! உத்தம வில்லன் திரைப்படத்தில் கமலுக்கு மகளாக

ஸ்ருதிஹாசன் தெலுங்கில் தற்போது படுபிஸியான நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் மட்டும் கிட்டத்தட்ட 5 படங்களில் கமிட் ஆகியிருக்கும் ஸ்ருதிஹாசன் தமிழிலும் சீரான இடைவெளியில் சில படங்கள் நடித்து தனது மார்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். சமீபத்தில் விஷாலின் பூஜை திரைப்படத்தில் கமிட் ஆன ஸ்ருதி, அதற்கு முன்பு கமல் நடித்துக்கொண்டிருக்கும் உத்தமவில்லன் திரைப்படத்தில் கமலுக்கு மகளாக நடிப்பதற்கு பேசப்பட்டிருக்கிறார். வேறு நடிகை மகளாக நடிப்பதை விட, உண்மையான மகளே மகளாக இருந்தால் கதாபாத்திரம் உயிரோட்டத்துடன் இருக்கும் என்ற எண்ணத்தில் ஸ்ருதிஹாசனிடம் பேசி ஓகே செய்ப்பட்டது. ஆனால் மரியான் திரைப்படத்தில் நடித்த பார்வதி மேனன் தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிக்காதது குறித்து சமீபத்தில் பேசிய ஸ்ருதிஹாசன் “கால்ஷீட் இல்லாததால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கமுடியவில்லை. என் தந்தைக்கு மகளாக நடிக்க முடியாதது குறித்து வருந்துகிறேன்” என்று கூறினாராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக