முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பாராளுமன்ற தேர்தலையொட்டி மார்ச் 3–ந்தேதியில் இருந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில்
ஈடுபட்டார்.
தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்த அவர் கடந்த 21–ந்தேதி சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை
முடித்தார்.
நேற்று கோட்டைக்கு வந்து அலுவலக பணிகளை கவனித்தார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்கிறார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை செல்லும்
அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கொடநாடு செல்கிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘‘முதல்–அமைச்சர்
ஜெயலலிதா சென்னையிலிருந்து நாளை (27–ந்தேதி) நீலகிரி மாவட்டம்
கோடநாட்டிற்கு புறப்பட்டுச் செல்கிறார். சில நாட்கள் அங்கு தங்கி,
அங்கிருந்தபடியே அரசுப்
பணிகளை மேற்கொள்வார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
கோடநாட்டில் முதல்–அமைச்சரை வரவேற்க நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு
வருகிறது. maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக