சனி, 26 ஏப்ரல், 2014

பிரதமர் மன்மோகன் சிங்கின் தம்பி பாஜகவில் இணைந்தார் ! டீலுக்கு எவ்வளவு காசு ?

அமிர்தசரஸ்:பா.ஜ.க.,வில் பிரதமர் மன்மோகன்சிங் சகோதரர் தல்ஜித் சிங் கோலி நேற்று இணைந்தார்.பஞ்சாப் தலைநகர் அமிர்தசரசில் பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி பா.ஜ.க.வில் இணைந்தார். வரும் 30ம் தேதி பஞ்சாபில் தேர்தல் நடக்கிறது.இந்நிலையில் பிரதமரின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி பா.ஜ.க.,வி்ல் இணைந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து மாநில முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து நன்கு அறிந்ததால் தான் தல்ஜித் சிங் கோலி பா.ஜ.க.,வில் சேர முடிவு செய்திருப்பார் என்றார். தம்பி தல்ஜித் சிங் இந்த டீலுக்கு எவ்வளவு காசு வாங்கினார் என்று தெரியல? மன்மோகனின் ஆட்சி பற்றி சுய கருத்துக்கு வர இந்த நேரம் தான் கிடைத்ததா ? இவனையெல்லாம் சேர்க்கிற பாஜகாவின் யோக்கியதை???.

உரிமை உண்டு:பிரதமரின் அலுவலகம் இது குறித்து கூறுகையில், தல்ஜித்சிங் கோலி பா.ஜ.க.,வில் இணைந்ததன் நோக்கம் என்னவென்று தெரியாது.ஆனால் தமக்கு பிடித்தமான கட்சியில் சேர அவருக்கு உரிமை உண்டு என்கிறது.
மோடி பேசுகையி்ல், பா.ஜ.க.,வில் தல்ஜித்சிங் சேர்ந்திருப்பது எங்களுடைய வலிமை இரட்டிப்பாகி உள்ளதாகவும் நாங்கள் எங்கள் இதயபூர்வமான வரவேற்பை தெரிவித்துகொள்கிறோம்.நாம் வெறும் கட்சி உறுப்பினர்கள் உள்ள கட்சி கிடையாது என்றும் நம் உறவுதான் கட்சி.இதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் ரத்த உறவுகள் என்றார் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக