திங்கள், 14 ஏப்ரல், 2014

வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி?

டெல்லி: வாரணாசியில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடுவார் என்று வெளியாகும் தகவல்களை  காங்கிரஸ் மேலிடம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுவரை தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பிரியங்கா முதன் முறையாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவர் வழக்கம் போல ரேபரேலி மற்றும் அமேதி தொகுதியில் பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபட போவதாக காங்கிரஸ் மேலிடத் தகவல்கள் கூறுகின்றன.  ஆனால் பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவது காங்கிரஸ் கட்சிக்கு வலுவூட்டுவதாக அமையும் என்று பல்வேறு தலைவர்களும் விரும்புவதாக கூறப்படுகிறது. தினகரன்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக