திங்கள், 14 ஏப்ரல், 2014

மோடியின் மனைவிக்கு பாரத ரத்னா விருது? சகிப்புத் தன்மை மற்றும் தியாகத்தை மெச்சி ?

பாராளுமன்ற தேர்தலில் வதோதரா தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோடி கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தன்னைப் பற்றிய சுய விபரத்தில் திருமணம் ஆனவர் என்றும், தனது மனைவி பெயர் யசோதா பென் எனவும் குறிப்பிட்டிருந்தார். தனது திருமணம் குறித்து முதன்முதலாக நரேந்திரமோடி தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை தான் திருமணம் ஆனவர் என்றோ, தனது மனைவி பெயர் பற்றியோ மோடி பகிரங்கமாக அறிவித்தது இல்லை.
இந்நிலையில், இந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டும் மனைவியின் பெயரை மோடி குறிப்பிட்டுள்ளது தொடர்பாக எதிர்க்கட்சி தரப்பினர் கடும் விமர்சனத்தையும், பா.ஜ.க.வினர் தொடர்ந்து விளக்கத்தையும் வெளியிட்டு வரும் வேளையில், அசாம் முதல் மந்திரி தருண் கோகாய், ’மோடியின் மனைவி செய்துள்ள தியாகத்துக்காக அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அளிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.


தலைநகர் கவுகாத்தியில் செய்தியாளர்களை சந்தித்த தருண் கோகாய், 'அவரது (யசோதா பென்) சகிப்புத் தன்மை மற்றும் தியாகத்தை மெச்சி, மிக உயர்ந்த பெண்மணியாக கருதி, பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்க வேண்டும் என்று நான் பரிந்துரை செய்வேன்.

அவரை இத்தனை ஆண்டுகளாக யாருமே நினைவு கொள்ளாதது பரிதாபகரமானது. ஒட்டுமொத்த பா.ஜ.க.வினரும் எல்லா காலகட்டத்திலும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்களாகவே இருந்துள்ளார்கள். மோடி சன்னியாசி அல்ல. பதவிப் பசியும், பேராசையும் கொண்ட மோடி சன்னியாசியாகி விட முடியாது' என்று தெரிவித்தார். maalaimalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக