புவனேஸ்வர்:''தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி விடும் கட்சிகளை நம்பி
விடாதீர்கள்,'' என, காங்கிரஸ் தலைவர், சோனியா தெரிவித்துள்ளார்.ஒடிசா
மாநிலம், காரியர் பகுதியில், தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற சோனியா
பேசியதாவது:தேர்தல் நேரத்தில், வானளாவ வாக்குறுதிகளை அள்ளி விடும் கட்சிகளை
நம்பி, மோசம் போகாதீர்கள். அவர்கள் உங்களுடன் என்றும் இருக்க மாட்டார்கள்.
அவர்களது நோக்கமெல்லாம், நாற்காலியை பிடிப்பது மட்டும் தான்.எனவே, ஓட்டு
போடுவதற்கு முன், உங்கள் மூளையை பயன்படுத்துங்கள்.ஏழைகள் மற்றும்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு ஆதரவாக உள்ளது காங்கிரஸ் மட்டுமே.இந்த
மாநிலத்தை ஆளும், பிஜு ஜனதா தளம், இங்குள்ள சுரங்கங்களை எல்லாம்,
தனியாருக்கு தாரை வார்த்துள்ளது. மக்களின் வேலை வாய்ப்பு வளர்ச்சி எல்லாம் பறிபோயிருச்சே?சோனியா அம்மா சொல்றது சரிதான் வாக்குறுதிகள அள்ளி வீசீட்டு அப்புறம் இடிக்க ஆரம்பிச்சுருவாங்க , வடநாட்டுல இடிச்சாங்க அந்த எபெக்ட் இங்க பெருசா தெரியுல ஆனா ஒருலட்சம் வருசத்துக்கு முந்தி கட்டுன பாலத்த இடிகக்கூடாதுன்னு சேது சமுத்திர திட்டத்த கெடுத்துட்டு போயிட்டாங்களே இதனால தென்மாவட்டமக்களின் வேலை வாய்ப்பு வளர்ச்சி எல்லாம் பறிபோயிருச்சே?
எவ்வளவோ தடைகளுக்கு மத்தியில், உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். இதன் மூலம் பட்டினி கிடக்கும் நிலை ஒழிக்கப்பட்டுள்ளது.இதே போல வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகளின் நிலப் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி பணிகள் என்ற பெயரில், பழங்குடி மக்களின் நிலத்தை, யாரும் இனி அபகரிக்க முடியாது.மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம், கிராம மக்களின் பொருளாதார நிலை மேம்பட்டுள்ளது. எனினும் ஒடிசா அரசு, இந்த திட்டத்தை முழுவீச்சில் அமல்படுத்தவில்லை. அனைவருக்கும் மருத்துவ வசதி மற்றும் வீட்டு வசதி அளிக்கும் திட்டத்தையும் அமல்படுத்த உள்ளோம்.இவ்வாறு சோனியா பேசினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக