ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மோடி- ரஜினி புகழாரம்!! ராகு கேதுக்கள் சேர்க்கை ?

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது ரஜினிக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததாக மோடி கூறினார். மோடி சிறந்த தலைவர், நிர்வாகி.. அவர் நினைத்தது வெற்றியடைய வாழ்த்தியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார். காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ரஜினியைச் சந்தித்து ஆதரவு கேட்பதில் தீவிரமாக உள்ளனர். குறிப்பாக நரேந்திர மோடி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ரஜினியைச் சந்திக்கத் தவறுவதில்லை. தமிழக பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன் போன்றவர்கள், ஒவ்வொரு பேட்டியிலும் ரஜினியின் ஆதரவு எங்களுக்கே என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்காக நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகை தந்தார். நடிகர் ரஜினிகாந்தை வீட்டில் சந்தித்தார் மோடி!!  கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தனி விமானத்தில் சென்னை வந்தார் மோடி. சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேராக போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு நரேந்திர மோடி சென்றார். அவரை ரஜினிகாந்த் தமது குடும்பத்தினருடன் வரவேற்றார்.

இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்துக்கு நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் மோடிக்கும் ரஜினிகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்தை வீட்டில் சந்தித்தார் மோடி! வேட்டியில் மோடி ரஜினிகாந்தை சந்திக்க சென்ற நரேந்திர மோடி வழக்கம் போல உடை அணியாமல் தமிழக கலாசாரப்படி வெள்ளை வேட்டி அணிந்து வந்திருந்தார். ரஜினி வழக்கம் போல வெள்ளை வேட்டி, வெள்ளை நிற முழுக்கை சட்டையில் மோடியை வரவேற்றார். தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன் - மோடி இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி, நண்பர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவருக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என்றார்.   பவர்புல் லீடர் மோடி- ரஜினி இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.. நான் மருத்துவமனையில் இருந்த போது என்னை அவர் சந்தித்தார். நான் இங்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். மோடி தலைசிறந்த நிர்வாகி... தலைவர்.. நரேந்திர மோடி என்னை சந்திக்க வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இது தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. அவர் என் நலம் விரும்பி. நான் அவரோட நலம் விரும்பி.. அவருக்கு நான் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந் சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக