புதன், 23 ஏப்ரல், 2014

தனியாக இருக்கும் லேடிக்கு 900 ஏக்கர் நிலம் எதற்கு? விஜயகாந்த் சாடல் -

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜ், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் மாசிலாமணி ஆகியோரை ஆதரித்து நங்கநல்லூரில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு பகுதி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன் தலைமை தாங்கினார். மதிமுக நகர செயலாளர் கத்திப்பாரா சின்னவன், பாமக நகர செயலாளர் கணபதி, பாஜ நகர செயலாளர் பாபு, கேப்டன் மன்ற மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். அனகை முருகேசன் எம்எல்ஏ வரவேற்று பேசினார்.இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது:நிர்வாக திறமையில் சிறந்தவர் இந்த லேடியா, அந்த மோடியா என அந்தம்மா கேக்கிறாங்க. மக்களாகிய நீங்கள்தான் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
மோடியை விட இந்த அம்மா சிறந்தவர் தான். அதனாலதான் இந்த அம்மா 15 ஆண்டுகள் வாய்தா வாங்கி வருகிறார். டான்சி நில விவகாரத்தில் கையெழுத்திடவில்லை என்கிறார். இதை எல்லாம் பார்க்கும்போது இவர் சிறந்தவர் தான். மக்கள் சிந்தித்து வாக்களிப்பதற்கு தான் ஒரு நாள் இடைவெளியை தேர்தல் கமிஷன் தந்திருக்கிறது. அந்த ஒரு நாள் நீங்கள் யோசித்து ஓட்டு போடுங்கள்.அமைதி, வளம், வளர்ச்சி என்று இந்த அம்மா சொல்கிறார். நாம் அமைதியாக இருப்பதால் அந்த அம்மையார் வளமும், வளர்ச்சியாக இருக்கிறார். இந்த லேடி தனக்கு யாரும் இல்லை என்கிறார். அப்படியென்றால் அவருக்கு 900 ஏக்கர் நிலம் எதற்கு?இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.தேமுதிக நிர்வாகிகள் செல்வஜோதிலிங்கம், செல்வம், செந்தூர் மணி, ஆசிப், விநாயகம், ராஜேஷ், கலைவாணன், ரமணா, சந்திரபாபு, வளர்மதி, பாமக அரங்கநாதன், செல்வம், சீனிவாசன், பாஜ வேதகிரி, சிவகுமார், இன்பராஜ் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
- See more .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக