புதன், 12 மார்ச், 2014

ஜெயலலிதாவின் ஊழல்களை மறந்தும் கண்டு கொள்ளாத ஆம் ஆத்மி ஆ.ராசா, கனிமொழி மீது மட்டும் காய்ச்சல் ஏன் ? CASTE , CLASS !

சென்னை: முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர்கள் ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரை எதிர்த்து தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண்குமார் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் தமிழக வேட்பாளர்களின் பட்டியல் வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை வெளியிடப்படும். ஊழலில் மூழ்கிய வேட்பாளர்களை எதிர்த்து எல்லா இடங்களிலும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதி மாறன் ஆகியோரை எதிர்த்து நிச்சயமாக வேட்பாளர்களை நிறுத்துவோம்' என்று தெரிவித்தார். உதயகுமாருக்கு வாய்ப்பு உங்கள் கட்சியில் சேர்ந்திருக்கும் உதயகுமார் மீது ஏராளமான வழக்குகள் உள்ள நிலையில் அவருக்கும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டேவிட் பருண்குமார், 'அவர் கைது செய்யப்பட்டாலும் சிறையில் இருந்தபடியே வேட்பு மனுவினை தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிடுவார்' என்று கூறினார். பெரிய நேர்மையாளன் புரட்சி வாதி என்று நடிக்கும் இந்த அரவிந்த் கேஜ்ரிவால் நிச்சயமாக ஒரு ஜமுக்காளத்தில் வடிகட்டின சந்தர்ப்பவாதி.
தப்பி தவறிக்கூட இவன் ஜெயலலிதாவின் ஊழல்களை பற்றி பேசியதே இல்லை.

ஊழல் ஊழல் என்று கோஷம் இடும் எவனும் ஜெயலலிதாவை மறக்கவே முடியாது, 
இந்திய சரித்திரத்தில் ஜெயலலிதா அளவு அதிகார துஷ்பிரயோகம் ஊழல் முதலைமச்சர் யாரும் இருந்ததில்லை .
டாம்பீகம் நாட்டு நலனை புறந்தள்ளி மாற்றுகட்சி கொண்டுவந்த நல்ல திட்டங்களை எல்லாம் கூசாமல் கிடப்பில் போட்டு அரசு கஜானாவை  தெருவில் அள்ளிவீசும் ஊதாரித்தனம் போன்றவற்றில் அகில இந்திய சாதனை படைத்தது கொண்டிருக்கும் ஒரு அய்யங்கார் பெண்மணிக்கு  எப்பொழுதும் சாமரம் வீசும் மீடியாக்கள், இதர மேல்தட்டு பிரமுகர்கள் !
tamil.oneindia.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக