புதன், 12 மார்ச், 2014

பாஜகவின் நமோ டீக்கு தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி- இலவச டீ லஞ்சத்திற்குச் சமம் என்று எச்சரிக்கை!


டெல்லி: பாஜகவினரின் நமோ டீ விற்பனைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து விட்டது. இலவசமாக எதையும் வாக்காளர்களுக்கு தரக் கூடாது என்றும் அது எச்சரித்துள்ளது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் மிகக் குறைந்த விலைக்கு இந்த டீ விற்பனையை அவர்கள் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆணையம் அதிரடி- இலவச டீ லஞ்சத்திற்குச் சமம் என்று எச்சரிக்கை! டீ விற்றவர் மோடி என்று காங்கிரஸார் பிரசாரம் செய்யப் போக அதையே தனக்கு சாதகமாக்கி நமோ டீ ஸ்டால் என்ற பெயரில் நாடு முழுவதும் டீக்கடைகளை நிறுவி இலவசமாக டீ விநியோகித்து வருகிறார்கள் பாஜகவினர். மோடி கூட்டம் நடக்கும் இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்த நமோ டீஸ்டால்களைத் திறந்து இலவசமாக டீ விநியோகித்து வருகின்றனர். இந்த டீக்கடையும் பிரபலமாகி விட்டது. மேலும் டீக்கடை போக பல்வேறு வகையான கடைகளையும் அவர்கள் திறந்து வருகின்றனர். மேலும் மோடியே டீக்கடைகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசவும் ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் நமோ டீஸ்டால்களுக்கு தேர்தல் ஆணையம் திடீரென தடை விதித்து விட்டது. இலவசமாக டீ விநியோகம் செய்வது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்குச் சமம். இலவசமாக வாக்காளர்களுக்கு எதையும் தரக் கூடாது என்று அது கூறியுள்ளது. மேலும் இலவசமாக டீ விநியோகிக்கும் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பலர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்மிபூர் என்ற இடத்தில் மோடியின் டீக்கடை பிரசாரத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் பார்த்தவர்களுக்கு டீ விநியோகித்த பாஜகவினர் மீது வழக்குப் போட்டுள்ளனர் போலீஸார். வாக்காளர்களுக்கு இலவசமாக டீ விநியோகித்ததாவும், முன் அனுமதி பெறாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும் அவர்கள் மீது போலீஸார் வழக்குப் போட்டுள்ளனராம்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக