புதன், 12 மார்ச், 2014

(ஜெயலலிதா ?) மமதா பானர்ஜி அன்னா ஹசாரேவுடன் ஒரே மேடையில் இன்று பங்கேற்பு ! மமதாவின் தேசிய வியூகம் !


டெல்லி: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி டெல்லியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் மமதா பானர்ஜி. அன்னா ஹசாரே பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமது தேசிய அளவிலான தேர்தல் வியூகத்தை மமதா பானர்ஜி வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது. இக்கூட்டத்தில் தமது கட்சியின் வேட்பாளர் பட்டியலையும் மமதா பானர்ஜி வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது. அண்மைக்காலமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன் என்றும் ஜெயலலிதா, மாயாவதி ஆகியோருடன் இணைந்து செயல்பட தயார் என்றும் மமதா பானர்ஜி கூறி வருகிறார். அத்துடன் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் ஆதரவைப் பெற்றவராகவும் வலம்வருகிறார் மமதா .இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமது தேர்தல் வியூகங்களை மமதா பகிரங்கப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக